கரூர் மாவட்டத்தில், இன்று மட்டும் 14 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22,642 - ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 21 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 22,122 -ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழப்பு இல்லை.
இதனால் கரூர் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 351 இருக்கிறது. இந்நிலையில் 169 நபர்கள் கொரோனா பாதிப்பால் கரூரில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று கரூர் மாவட்டத்தில் 3000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன் பெறும் வகையில் பத்துக்கு மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி போடப்பட்டது. அதைத்தொடர்ந்து 20க்கும் மேற்பட்ட இடத்தில் இன்று சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெற்றது. நாளை தடுப்பூசி போடுவது குறித்து இதுவரை அதிகாரபூர்வ தகவல் இல்லை.
அதேபோல் நாமக்கல்லில் கொரோனா தொற்று பாதித்தவர்களை பற்றி பார்க்கலாம் .
நாமக்கல் மாவட்டத்தில் இன்று மட்டும் 61 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 47206 ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 42 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 46165-ஆக அதிகரித்துள்ளது. இன்று மூன்று நபர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 448 -ஆக இருக்கிறது. இந்நிலையில் 593 நபர்கள் கொரோனா பாதிப்பால் நாமக்கல் மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நாமக்கல் மாவட்டத்தில் இன்று குறிப்பிட்ட சில இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் மூன்றாவது அலை விரைவாக வரவிருக்கும் நிலையில் தமிழக அரசு அதற்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது. இருப்பினும் உலக சுகாதாரத்துறை மூன்றாவது அலை அதிக அளவில் குழந்தைகளை பாதிக்க வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளனர்.
நிலையில் தலைநகர் முக்கிய ஆன்மீக தலங்கள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர். அதேபோல் பல்வேறு மாவட்டங்களில் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை ஆலய தரிசனத்திற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகவே, மாவட்ட மக்கள் தமிழக அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை இப்படி வெளியே செல்லும் பொழுது முகக் கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் தேவையில்லாத காரணத்திற்காக வீட்டைவிட்டு குழந்தைகளை எக்காரணம் கொண்டும் வெளியே அழைத்துச் செல்ல வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளன. கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மாவட்ட மக்கள் அச்சத்தில் உள்ளனர்.