கரூர் மாவட்டத்தில், இன்று மட்டும் 12 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22,553  -ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 18 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 22,022 -ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழப்பு இல்லை. இதனால் கரூர் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 351  இருக்கிறது. இந்நிலையில் 180 நபர்கள் கொரோனா பாதிப்பால் கரூரில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 





கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து 2 நாட்களாக தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசி போடாத நிலையில் நாளை தடுப்பூசி போடுவது குறித்து இதுவரை அதிகாரபூர்வ தகவல் இல்லை. அதேபோல் நாள்தோறும் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெற்று வருகிறது இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் பயன்படுத்தி வருகின்றனர். 




அதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் இன்றைய கொரோனா தொற்று பாதித்தவர் விவரங்களை தற்போது காணலாம்.


நாமக்கல் மாவட்டத்தில் இன்று மட்டும் 51 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 46854 -ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 85 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 45812-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல். இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 440 -ஆக  இருக்கிறது. இந்நிலையில் 602  நபர்கள் கொரோனா பாதிப்பால் நாமக்கல் மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




நாமக்கல் மாவட்டத்தில் நாள்தோறும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருவதாகவும் , அதேபோல் தலைமை மருத்துவமனையில் நாள்தோறும் அதிக அளவில் கொரோனா பரிசோதனையும்  நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.




தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி பொதுமக்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என கரூர் மற்றும் நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நாள்தோறும் வேண்டுகோள் வைத்து வருகின்றனர். கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைந்த அளவில் இருப்பதால் மாவட்ட மக்கள் நிம்மதி.


தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று ஆயிரத்து 808  நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,44,219 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 1,808 ஆக உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் பலி எண்ணிக்கை 22 ஆக உள்ளது.