தமிழ்நாட்டில் இன்று 1,00,048 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு  720 ஆக உள்ளது. சென்னையில் மேலும் 115 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 9 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். 758 பேர் சிகிச்சை முடித்துக் கொண்டு வீடு திரும்பியுள்ளனர் என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. 


 










கோவையில் 106 ஆக இருந்த கொரோனா தொற்று தற்போது 109 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாகவும், 32 மாவட்டங்களில் புதிய உயிரிழப்பு இல்லை எனவும் சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 


 






இன்று மட்டும் 758 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில், இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 82 ஆயிரத்து 192 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, மாநிலம் முழுவதும், 8 ஆயிரத்து 244 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


 


 






அதிகம் பாதிப்புள்ள முதல் 5 மாவட்டங்கள்


*சென்னை - 115 


 






*கோவை - 109


*ஈரோடு - 72 


*திருப்பூர் - 61


*செங்கல்பட்டு - 58


மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்




 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண