கரூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 09 நபருக்கு கொரோனா தொற்று பாதிப்பு . இதனால் கரூர் மாவட்டத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 29,892-ஆக உயர்ந்துள்ளது. கரூர் மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்றால் குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 06 நபர்கள். கரூர் மாவட்டத்தில் தற்போது சிகிச்சைக்காக 43 நபர்கள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி. கரூரில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழப்பு இல்லை.


 




இன்று தடுப்பூசி போடவில்லை. மேலும், நாள்தோறும் பத்துக்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை காய்ச்சல் முகாம் நடைபெற்று வருகிறது. மேலும், கரூர் நகர பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய தடுப்பூசி சிறப்பு மையமும், காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பூஸ்டர் தடுப்பூசி முகாம் செயல்பட்டு வருகிறது. 


நாமக்கல்லில் கொரோனா தொற்று பாதித்தவர்கள்.


நாமக்கல் மாவட்டத்தில் இன்று புதிதாக 42 நபர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு. நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 68,450 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் இன்று சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பியவர் எண்ணிக்கை 22 நபர்கள். நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியோர் 67,736 நபர்கள். 



நாமக்கல் மாவட்டத்தில் இன்று கொரோனாவால் உயிரிழப்பு இல்லை . நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தவர்கள் 534 நபர்கள். தற்போது நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக 180 நபர்கள் மருத்துவமனையில் அனுமதி. நாமக்கல் மாவட்டத்தில் தலைமை அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.



தமிழகத்தில் இன்று 2340 நபர்கள் புதிதாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இன்று சிகிச்சை முடிந்து வீடு திரும்புவோர் 2599 நபர்கள் ஆகும். கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்கள் இன்று 0 நபர்கள். தற்போது வரை மருத்துவமனைகளில் சிகிச்சையில் 17,228 நபர்கள் உள்ளனர். 


கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து தங்களது இயல்பு வாழ்க்கையை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக அரசு இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில் மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து  பயணிக்க வேண்டும். இல்லை என்றால்  அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.