மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை கொரோனா வைரஸ் தொற்று 500 க்கும் மேற்பட்ட எண்ணிக்கைகளில் நாள் தோறும் பதிவாகிவந்தது. தற்போது படிப்படியாக குறைந்து வந்த நிலையில் இன்று மட்டும் 19 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பதிவை விட ஒருவருக்கு தொற்று குறைவு. இதுவரை மாவட்டத்தில் 22 ஆயிரத்து 656 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, அதில் 22 ஆயிரத்து 135 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் இன்று ஒரேநாளில் மட்டும் 19 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 29 பேர் குணமாகி வீடு சென்றுள்ளனர். இந்த சூழலில் இன்று கொரோனா வைரஸ் தொற்றால் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து கொரோனா வைரஸ் தொற்றால் பலியாகியுள்ளனர் எண்ணிக்கை மாவட்டத்தில் 300 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கொரோனா வைரஸ் தொற்றிக்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, தரங்கம்பாடி, செம்பனார்கோவில், சீர்காழி, புத்தூர் உள்ளிட்ட ஊர்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்கள், கொரோனா வகைப்படுத்தும் மையம், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை என மாவட்டம் முழுவதும் தற்போது 221 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே தீர்வு என மத்திய, மாநில அரசுகள் தடுப்பூசி போடும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
ஒருகிணைந்த மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 8 லட்சத்து 13 ஆயிரத்து 439 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகவும், முதல் தவணை தடுப்பூசி 6 லட்சத்து 68 ஆயிரத்து 731 பேரும், இரண்டாம் தவணை தடுப்பூசியை 1 லட்சத்து 44 ஆயிரத்து 708 பேருக்கும் செலுத்தப்பட்டு விட்டதாகவும், கோவாக்சின் 75 ஆயிரத்து 19 பேருக்கு கோவிஷீல்ட் 7 லட்சத்து 38 ஆயிரத்து 420 பேருக்கும் போடப்பட்டுள்ளது எனவும், நகர் பகுதி கிராமங்கள் என மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஊராட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பு ஊசி செலுத்தப்படும் பணி தொடரப்பட்டுள்ளது என்றும். இன்று மட்டும் 883 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 3 லட்சத்து 74 ஆயிரத்து 931 ஆண்களுக்கும், 4 லட்சத்து 38 ஆயிரத்து 389 பெண்களுக்கும், திருநங்கைகள் 119 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.