தேனி , திண்டுக்கல் இரு மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் நோய் தொற்றானது பரவல் குறைந்து வந்த நிலையில் . திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று மட்டும் 22 நபர்களுக்கு நோய் தொற்று பரவல் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இரண்டு மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக நோய் தொற்றால் உயிரிழப்புகள் ஏதும் இல்லை.
திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தில் கடந்த வாரத்தை பொருத்த வரையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, நோய் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று மட்டும் 22 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 32099 ஆக உயர்ந்துள்ளது.
அதே போல் இன்று மட்டும் 16 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 31240 ஆக குறைந்துள்ளது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 618ஆக இருக்கிறது. தற்போது 241 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் திண்டுக்கல் மாவட்டத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. திண்டுக்கல் மாவட்டத்தி இன்று கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு உயிரிழப்புகள் ஏதும் இல்லை என்பது ஆறுதல்.
அதே போல் தேனி மாவட்டத்தில் இன்று மட்டும் 10 நபர்களுக்கு நோய் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42853-ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 45 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 42139ஆக குறைந்துள்ளது. தற்போது வரையில் தேனி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 514 ஆக இருக்கிறது. இன்று 200 நபர்கள் கொரோனா வைரஸ் பாதிப்பால் தேனி மாவட்டத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தேனி மாவட்டத்தில் இன்று உயிரிழப்புகள் ஏதும் இல்லை என்பது ஆறுதல். திண்டுக்கல் மற்றும் தேனி இரு மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் கடந்த சில தினங்களாக சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருவோர்களின் எண்ணிக்கை இரு மாவட்டங்களிலும் தொடர்ந்து குறைந்து வருகிறது.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று ஆயிரத்து 808 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,44,219 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 1,808 ஆக உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் பலி எண்ணிக்கை 22 ஆக உள்ளது.
வடமாநிலத்தவர்களின் ஆக்கிரமிப்பில் கேரளா தோட்ட வேலை பணியாளர்கள்
தெரிந்துகொள்ள,
தோட்ட வேலைகளை ஆக்கிரமித்த வடமாநிலத்தவர்கள்.. வேலையிழப்பால் அவதிப்படுவதாக தமிழர்கள் வேதனை..!
திமிங்கலத்தின் எச்சம் 5 கோடியாம்! கடத்திய கும்பல் கைது.
படிக்க,
மூணாறு : திமிங்கலத்தின் எச்சத்தை 5 கோடிக்கு விற்க முயற்சி..! தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் கைது..!