Corona: கொரோனா ஹாட் ஸ்பாட்.. சென்னை ஐஐடியில் 111 பேருக்கு கொரோனா!
இந்நிலையில் சென்னை ஐஐடியில் மொத்தமாக 111 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை ஐஐடியில் மொத்தம் 111 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே 60 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் 18 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, ஐஐடியில் முதலில் 30 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டது. பின்னர் 25 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது. அதன்பின்னர் 6 பேருக்கு பாசிட்டிவ் என அறிவிக்கப்பட்டது. நேற்று 18 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மேலும் 32 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மொத்தமாக 111 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இருவர் குணமடைந்த நிலையில் 109 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
முன்னதாக, இது குறித்து தெரிவித்த சுகாதாரத்துறை செயலர், ''ஐஐடியில் கொரோனா பாதித்த அனைவருக்கும் லேசான அறிகுறிகள் உள்ளன. ஒரு சிலருக்கே காய்ச்சல் உள்ளது. மொத்தமாக 1420 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது என்றார்.
Just In





தமிழ்நாட்டில் பொது இடங்களில் மாஸ்க் போடாவிட்டால் 500 ரூபாய் அபராதம் வசூலிக்க மீண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )