கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


தமிழகத்தில் கடந்த சில  நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் தமிழக சுகாதாரத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனிடையே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த ஜூலை 12 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்திருந்தார்.






மேலும் அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம் எனவும் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள், திமுக தொண்டர்கள், பிற அரசியல் கட்சி தலைவர்கள் என அனைவரும் அவர் விரைவில் பூரண உடல் நலம் பெற வாழ்த்து தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இதனைத் தொடர்ந்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸூக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவரின் ட்விட்டர் பதிவை குறிப்பிட்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அய்யா டாக்டர் ராமதாஸ் அவர்கள் விரைந்து நலம் பெற விழைகிறேன் என  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். 






இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலின் காவேரி மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிடி ஸ்கேன் பரிசோதனைக்கு சென்ற நிலையில் அவரின் கொரோனா அறிகுறிகளை கண்காணிப்பதற்காக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண