நாடு முழுவதும் கொரோனா கடுமையாக அதிகரித்து வருகிறது. இதனால், மத்திய மற்றும் மாநில அரசுகள் கடும் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.