ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கைக்கு ஆலோசனை வழங்க உயர்மட்ட மத்தியகுழு தமிழ்நாடு வருகிறது. மேலும், கேரளா, மஹாராஷ்டிரா, கர்நாடகா, உத்தர பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், ஜார்கண்ட், பஞ்சாப் போன்ற மாநிலங்களுக்கு மத்தியகுழு விரைகிறது.
இந்த மத்திய குழுவில் பல்வேறு துறை அதிகாரிகள் அடங்கிய குழு இடம் பெற்றுள்ளதாகவும், கொரோனா தடுப்பு மற்றும் கொரோனா தடுப்பூசி குறித்த பணிகளை துரித படுத்தவும், ஆலோசனை வழங்கவும் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, உலகம் முழுவதும் கடந்த 2020-ஆம் ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா தொற்றின் தாக்கம் மக்களை பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கியது. ஒருபுறம் பட்னி, மற்றொருபுறம் வேலை இழப்பு என சொல்ல முடியாத அளவிற்கு பிரச்சனைகளைச் சந்தித்து வந்த நிலையில் தொற்றின் வேகம் சற்றுத் தணிந்தது. ஆனால் மீண்டும் டெல்டா வகை தாக்கப்பட்டபோது லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.
தற்போது மீண்டும் மற்றொரு பாதிப்பான ஒமிக்ரான் ஒருபுறம் அதிகரித்துவருகிறது. ஆனால் இதுக்குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்று மருத்துவக்குழுவினர் தெரிவித்து வருகின்றனர். மருத்துவர்களின் கருத்தின்படி, டெல்டா வகையான வைரசிற்கும், ஒமிக்ரான் வைரசிற்கும் இடையே முக்கிய வேறுபாடுகள் உள்ளன. குறிப்பாக டெல்டா வைரஸ் பரவும் வேகத்தைக்காட்டிலும் 40 மடங்கு அதிவேகமாகப் பரவக்கூடியது தான் ஒமிக்ரான். ஆனால் டெல்டா வைரசின் வீரியத்தில் பத்தில் ஒரு பங்கு வீரியத்தை மட்டுமே ஒமிக்ரான் கொண்டுள்ளதால் மக்கள் இதுகுறித்து அச்சப்பட தேவையில்லை எனவும் மருத்துவர்கள் குழு தெரிவித்துவருகிறது.
மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவில் இதுவரை 415 ஒமிக்ரான் தொற்று கண்டறிப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 108 பேர், டெல்லியில் 79 பேர், குஜராத்தில் 43 பேர், தெலங்கானாவில் 38 பேர் பதிவாகியுள்ளனர். தொடர்ந்து, கேரளாவில் மொத்தம் 37 பேருக்கும், தமிழகத்தில் 34 பேருக்கும் ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்