தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதி உடைய சிறுவர்கள் ஜனவரி 1 ம் தேதி முதல் cowin இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் 15 - 18 வயதான சிறுவர்கள் ஜனவரி 3 ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.
இந்தநிலையில், ஜனவரி 1 ம் தேதியான இன்று நாடுமுழுவதும் 15-18 வயதுக்குட்பட்ட சிறார் கொரோனா தடுப்பூசிக்கான முன்பதிவு தொடங்கியது. cowin இணையதளத்தில் 15-18 வயதுக்குட்பட்ட சிறார்கள் தங்களது ஆதார், பாஸ்போர்ட், பள்ளி அடையாள அட்டையை பயன்படுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
முன்னதாக, உருமாறிய கொரோனாவாக உருவெடுத்துள்ள ஒமிக்ரான் வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுக்கும் பொருட்டு கடந்த ஞாயிற்று கிழமை இரவு பிரதமர் மோடி உரையாற்றினார். அந்த உரையில், “இந்தியாவில் வரும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ஆம் தேதி முதல் 15 முதல் 18 வயதுடைய சிறுவர் சிறுமியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும். அதே போல ஜனவரி 10 ஆம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும். முதற்கட்டமாக மருத்துவபணியாளர்களுக்கும், முன்கள பணியாளர்களுக்கும் இணை நோய் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும்” என்று பேசினார்.
அதேபோல் சிறார்களுக்கான தடுப்பூசி குறித்து மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவிக்கையில், தமிழ்நாட்டில் 15-18 வயதினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 3ஆம் தேதி சென்னை சைதாப்பேட்டை பெண்கள் மாநகராட்சி பள்ளியில் தொடங்கும் என்றும், 15-18 வயதை சேர்ந்த சுமார் 33 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியானவர்கள் என்று தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்