தமிழகத்தில் படிப்படியாக தற்போது கொரோனா தொற்று குறைந்து வருகிறது என்றாலும், நம்மை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்த 1,800 டாக்டர்களின் வாழ்வாதாரம் கேள்விகுறியாக உள்ளது. 
 
கடந்த அதிமுக ஆட்சியில் பொதுமக்களை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க தமிழ்நாடு முழுவதும் 2,000 க்கு அதிகமான அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டது. அதன்பிறகு கடந்த சட்டபேரவையில் வெற்றி பெற்றபிறகு திமுக கட்சி ஆட்சிக்கு வந்தது. தொடர்ந்து, ஆட்சி பொறுப்பேற்ற திமுக அரசு அம்மா கிளினிக்குகள் செயல்படுத்த தயக்கம் காட்டியது. கடந்த 16 மாதங்களாக 1,820 மருத்துவர்கள், காய்ச்சல் முகாம்களை நடத்துதல், ஸ்வாப் சேகரிப்பு, தடுப்பூசி போடுதல், இரவு பணி, ஐசியூ மையங்கள் மற்றும் இறுதிச் சடங்குகள் போன்ற பணிகளில் ஈடுப்பட்டு வந்தனர்.


இருப்பினும், இப்போது, கொரோனா மூன்றாவது அலை தணிந்து வரும் நிலையில், அம்மா மினி கிளினிக்ஸ் திட்டத்தைக் கலைக்க, தற்போதைய திமுக அரசு முடிவெடுத்துள்ளது, இதையடுத்து, கடந்த இரண்டு வருடங்களாக இரவு பகலாக பணியாற்றி வந்த மருத்துவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த போதுமான ஏற்பாடுகளைச் செய்யவில்லை என்ற கருத்து பரவி வருகிறது. 


இதுகுறித்து 28 வயதான இளம் மருத்துவர் ஒருவர் தெரிவிக்கையில், கடந்த 2021 ம் ஆண்டு எனது சொந்த மாவட்டத்தில் உள்ள ஒரு மினி கிளினிக்கில் சேர்ந்தேன். பிப்ரவரி முதல் மார்ச் 2021 வரை, நான் அந்த கிளினிக்கில் பணியாற்றினேன். ஆனால் இரண்டாவது அலையில் எங்கள் நிலைமை மாறியது. கோவிட்-19 டெல்டா மாறுபாட்டின் காரணமாக நானும், என்னுடன் வேலை பார்த்த ஊழியர்கள் அனைவரும் மதுரை, சென்னை போன்ற பெரிய நகரங்களுக்கு அனுப்பமாட்டோம். நான் சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் பணியில் இருந்தேன். இரண்டாம் அலையின் உச்சக்கட்டத்தின் போது, சுமார் 30% மினி கிளினிக் பணியாளர்கள் சென்னை மருத்துவமனைகளில் பணியமர்த்தப்பட்டனர். 


சில மாதங்களுக்கு முன்பு இதுகுறித்து சுகாதார அமைச்சர் தெரிவிக்கையில், சுகாதாரம் தொடர்பாக அரசாங்கம் புதிய திட்டத்தைத் தொடங்குவதாகவும், அந்த பணிகளுக்கு தங்களை மாற்றுவதாக உறுதியளித்தார். ஆனால், தற்போது வரை அந்த புதிய திட்டத்திற்கு நிதி ஒதுக்க ஒப்புக் கொள்ளாததால், புதிய திட்டம் அறிவிக்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ளனர்.


இதன் காரணமாக தற்போது அவரும் அவரது நண்பர்களும் தமிழ்நாடு சுகாதார மற்றும் ஆரோக்கிய (மினி கிளினிக்) மருத்துவ மருத்துவர்கள் சங்கத்தின் உறுப்பினர் என்ற முறையில், 1,820 மருத்துவர்களின் பணியிடங்களுக்கு முறையான பணி வழங்கிட போராடி வருகின்றனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண