சேலம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 85 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 3 பேர் உயிரிழப்பு . மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு 1597 ஆக உள்ளது. மேலும் 87 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை சேலம் மாவட்டத்தில் 91,888 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94,328 ஆக உயர்வு. மாவட்டத்தில் 843 பேர் கொரோனாவிற்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 10 சதவீதத்திற்கும் குறைவான படுக்கைகளில் மட்டுமே நோயாளிகள் உள்ளனர். சேலம் மாவட்டத்தில் நேற்று 5077 பரிசோதிக்கப்பட்டதில் 92 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று மாதத்திற்கு பிறகு ஆயிரத்திற்கும் குறைவான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டத்தில் இன்று புதிதாக 25 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இன்று உயிரிழப்பு ஏதுமில்லை. மேலும் 34 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் 316 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு 237 ஆக உள்ளது. இதுவரை தர்மபுரி மாவட்டத்தில் 25,862 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 26,415 ஆக உயர்வு. கொரோனா நோய் தொற்று குறைந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் நேற்று 2056 பரிசோதிக்கப்பட்டதில் 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நோய் தொற்று அதிகரித்து இன்று ஒரே நாளில் 22 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் உயிரிழப்பு. நோயிலிருந்து குணமடைந்த 37 பேர் வீடு திரும்பியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 309 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு 325 ஆக உள்ளது. இதுவரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 41,004 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 41,638 ஆக உயர்வு. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 1769 பரிசோதிக்கப்பட்டதில் 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனை குறைந்த மக்களுக்கு மட்டுமே எடுக்கப்படுகிறது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.