உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் துவங்கிய கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகிறது. மிக வேகமாக பரவும் வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. தமிழகத்தில் முதல் அலை ஓய்ந்த பிறகு கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவியது.
இதனை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, பின் வைரஸ் தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும், பல்வேறு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் கொடுக்கப்பட்டு, ஊரடங்கு திரும்ப பெற்றுக் கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் மீண்டும் பள்ளிகள் திறப்பதற்கான ஆணையை அரசு பிறப்பித்தது . அதன் அடிப்படையில் கடந்த ஒன்றாம் தேதி முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டன.
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிக்காத, வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தாத ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது மூலம் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல அறிகுறி இருக்கும் பள்ளி மாணவர்களுக்கு வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிலருக்கு காய்ச்சல் அறிகுறி இருந்ததை ஆசிரியர்கள் கண்டறிந்தனர். இதையடுத்து 20 மாணவர்களுக்கு சுகாதாரத் துறையினர் மூலம் பள்ளியில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.. இதில் 4 மாணவர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகம் மாணவர்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர்கள், சக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என 30 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளில் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்ய பள்ளி நிர்வாகத்துக்கு சுகாதாரத் துறையினர் அறிவுரை வழங்கினர். உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலையில் 8 மாணவர்கள் 2 ஆசிரியர்கள் உட்பட 11 பேருக்கு கொரோனா