சேலத்தில் தொடர்ந்து கொரோனா நோய் தொற்று வெகுவாக குறைந்து வருகிறது. இன்று ஒரே நாளில் புதிதாக 302 நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 508 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மாவட்டம் முழுவதும்  84085 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்த கொரோனா பாதிப்பு 87563 ஆக பதிவாகியுள்ளது.
 


இரண்டு நாட்களுக்கு பிறகு சேலத்தில் இன்று (29.06.2021) 22 ஆயிரம் கோவிஷில்டு தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டது. மாவட்டம் முழுவதும் இதுவரை 7,50,465 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

 

தர்மபுரி, கிருஷ்ணகிரி நிலவரம்

 

தர்மபுரி மாவட்டத்தை பொறுத்தவரை இன்று ஒரே நாளில் புதிதாக 105 நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில்  ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். மேலும் 84  பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

 

கிருஷ்ணகிரியில் இன்று ஒரே நாளில் 98 புதிதாக  நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 108 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

 

சேலம் மாவட்டத்தில் தொற்று குறைந்து வருவதால் 80 சதவீத படுக்கைகள் காலியாக உள்ளது. மேலும் மூன்றாம் அலை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ மனையில் புதிதாக கொரோனா வார்டு அமைக்கப்பட்டு உள்ளது.