கொரோனா தடுப்பூசி மெகா சிறப்பு முகாம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 40 ஆயிரம் மையங்களில் நடைபெற்று வருகிறது, இதில் மக்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தி இருந்தது.  அதன்படி கடலூர் மாவட்டத்திலும் அனைத்து பகுதிகளிலும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்று வருகிறது.



 

கொரோனா தடுப்பூசி முகாமை துரிதப்படுத்த, மாநிலம் முழுவதும் ஒரே நாளில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து விடுபட்ட தகுதியானவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் இன்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சி பகுதிகள், கிராம ஊராட்சி அலுவலகங்கள், வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளி, கல்லூரி வளாகங்கள், அரசு கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்தவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 909 தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.



 

இந்த மாபெரும் தடுப்பூசி முகாமினை இன்று காலை ஶ்ரீமுஷ்ணம் பகுதியில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தனர். பல முறை மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு குடுத்து வந்தாலும் மக்களுக்கு இன்னும் தடுப்பூசி மீதுள்ள பயம் களையவில்லை, அதற்காக பாதிரிக்குப்பம் ஊராட்சி பகுதியில் வாழும் மக்களுக்கு ஊராட்சி சார்பில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வராத மக்களுக்கு தடுப்பூசி குறித்த உரிய விழிப்புணர்வு அளித்து, பின் அப்பொழுதும் அவர்கள் முன்வர தயக்கம் காட்டியதால் தடுப்பூசி செலுத்திக்கொள்வோருக்கு ரூபாய் 200 பரிசாக அளிக்கப்பட்டது இதனால் மக்கள் ஆர்வமாக வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டு சென்றனர்.



 

ஊராட்சி நிர்வகித்தின் இந்த முயற்சியினால் பல விழிப்புணர்வு இல்லாத மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. கடலூரில் கிட்டத்தட்ட நாற்பது சதவிகிதத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது, மேலும் இன்று நடைபெறும் இந்த மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமின் மூலம் இன்று ஒரே நாளில் 1,70000 பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு முகாம் நடைபெற்று வருவதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா மூன்றாவது அலை தாக்குவதற்கு முன்னாள் அனைவரும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டு அவரவர் உயிர்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும், ஏனெனில் தடுப்பூசி ஒன்று தான் கொரோனவை விரட்ட நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம்.