மதுரை மாவட்டத்தில் இன்று மட்டும் 18 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை74832-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 25 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 73380-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு ஏதும் இல்லை என்பது ஆறுதல். இதனால் மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1166 இருக்கிறது. இந்நிலையில் 286 கொரோனா பாதிப்பால் மதுரை மாவட்டத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் தேனி , திண்டுக்கல் ,விருதுநகர் , சிவகங்கை மாவட்டத்தில் விசாரித்தோம். 



தேனி மாவட்டத்தில் இன்று மட்டும் 12 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 43493ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 4 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 42872-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்புகள் ஏதும் இல்லை என்பது ஆறுதல். இதனால் தேனி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 519 இருக்கிறது. இந்நிலையில் 102 கொரோனா பாதிப்பால் தேனியில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று மட்டும் 11 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 32903-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 10 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 32127-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல். இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 639 இருக்கிறது. இந்நிலையில் 137 கொரோனா பாதிப்பால் திண்டுக்கல் மாவட்டத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




விருதுநகர் மாவட்டத்தில் இன்று மட்டும் 8 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 46159-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 11  நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 45473-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல். இதனால் விருதுநகர் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 547-ஆக இருக்கிறது. இந்நிலையில் 139 கொரோனா பாதிப்பால் விருதுநகர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது




சிவகங்கை மாவட்டத்தில் இன்று மட்டும் 12 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19953 ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 17 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 19608-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல். இதனால் சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 203 இருக்கிறது. இந்நிலையில் 142 கொரோனா பாதிப்பால் சிவகங்கையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


அரசு நிலங்களை முறைகேடாக பட்டா போட்டு கொடுத்த தகவல்கள் கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,


அரசு நிலத்தை அபேஸ் செய்து மலையை விழுங்கிய அதிமுக பிரமுகர் - குற்றவியல் நடவடிக்கை கோரி புகார் மனு