திருவண்ணாமலை மாவட்டத்தில்  இதுவரை  மாவட்டத்தில் 49 ஆயிரத்து 699 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, 47ஆயிரத்து 939 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் இன்று ஒரேநாளில் மட்டும் 175 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று கொரோனா தொற்றால் இறந்தவர்கள் 3 நபர்கள். இதுவரையில் கொரோனா தொற்றால்  இறந்தவர்கள் 602  ஆக உயர்ந்துள்ளது .



மேலும் கொரோனா வைரஸ் தொற்றிக்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் , தண்டரம்பட்டு , ஆரணி , செய்யார், வந்தவாசி , போளுர் ,  உள்ளிட்ட ஊர்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்கள், கொரோனா வகைப்படுத்தும் மையம், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை என மாவட்டம் முழுவதும் தற்போது  1158 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக படிபடியாக கொரோனா தொற்று உயர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள பொதுமக்கள் ஆர்வத்துடன் வருகின்றனர்