தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் என்பது  அதிகரித்து காணப்பட்டதால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் மிகுந்த சிரமத்தை அனுபவித்து வந்தனர். குறிப்பாக தமிழக அரசு கொரோனா பாதிப்பால் பல்வேறு கட்டுப்பாடுகள், ஊரடங்குகள் என அறிவித்தது,  அதன் பின்னர் தொற்றின் தாக்கம் சற்று குறைந்ததால் தளர்வுகளும் அறிவித்தன. பின்னர் பள்ளி, கல்லூரி என அனைத்தும் திறக்கப்பட்டு மாணவர்கள்  வகுப்பறைக்கு சென்று நேரடியாக பாடம் படிக்க துவங்கினர். இருப்பினும் தொற்றின் தாக்கம் முழுமையாக குறையாத காரணத்தால் இன்னும் பலர் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர். 


தஞ்சையில் நள்ளிரவில் ஆய்வு செய்த மத்தியகுழு - இரவில் சேதத்தை எப்படி கணக்கெடுப்பீர்கள் என விவசாயிகள் கேள்வி



குறிப்பாக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்  தற்போது மருத்துவ மாணவ - மாணவிகளுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன, இதனால்  மாணவிகள் பலர் கல்லூரி விடுதிகளில் தங்கி பயின்று வருகின்றனர். இந்த சூழலில் மருத்துவக்கல்லூரி மாணவி ஒருவருக்கு கடந்த திங்கட்கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது, இதனால் அவருடன் தங்கியிருந்த விடுதி மாணவிகளுக்கும் பரவியிருக்கும் என்பதால் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது, அதில் 10க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, இதனால்  மாணவிகளின் நலன் கருதி விடுதிகள் தற்காலிகமாக மூடப்பட திட்டமிடப்பட்டு உள்ளது. அதன் படி விடுதிகளை மூடவும் அவர்களுக்கு வகுப்புகள் மற்றும் தேர்வுகளை ஆன்லைனில்  நடத்தவும் கல்லூரி நிர்வாகம்  திட்டமிட்டு உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது




நெல்லை மாவட்டத்தில்   இதுவரை 49,608 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதில் 49,069 பேர் நேற்று வரை முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும் 106 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும்  இதுவரை கொரோனா பாதிப்பால் 433 பேர் உயிரிழந்து உள்ளனர்.  நெல்லை மாவட்டத்தில் நேற்று முன் தினம் 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் நேற்று 14 பேருக்கு தொற்று பரவியுள்ளது, இதில் மாநகரில் மட்டும் 8 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். வட்டார அளவில் பாளையங்கோட்டை, ராதாபுரத்தில் தலா 2 பேருக்கும், அம்பையில் ஒருவருக்கும் தொற்று பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மருத்துவக்கல்லூரி மாணவிகள் பலருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


பேரிடர் பாதித்த மாநிலமாக தமிழகத்தை அறிவிக்க வேண்டும் - மத்திய குழுவிடம் விவசாயிகள் கோரிக்கை