தேங்காய் எண்ணெய் இந்திய சமூகத்தோடு ஒன்றிணைந்தது. சமையலுக்கு தொடங்கி கேசம் வரை ஏன் சிறு காயம், உராய்வு ஏற்பட்டால் உடனடியாக கைவைத்தியம் போல் பூசுவதற்கு உட்பட தேங்காய் எண்ணெய் பயன்படுகிறது.
தேங்காய் எண்ணெய்யை நாம் கொண்டாடக் காரணம் என்ன? நமக்குத் தெரியாமலேயே அதில் இருக்கும் நன்மைகள் என்னென்ன?
எல்லோரும் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துகிறோம்.. ஆனால் இந்த விஷயம் யாருக்குமே தெரியாது என்றிருக்கும் அல்லவா? அப்படிப்பட்ட ஒரு விஷயத்தைச் சொல்ல முடியுமா?
தேங்காய் எண்ணெய்யின் மிகப் பெரிய நன்மை அது கூந்தல் உடைவதிலிருந்து பாதுகாக்கும். வெயில், மழை, தூசு உள்ளிட்டவற்றில் இருந்து காப்பதோடு சூட்டிலிருந்து வேதிபொருட்களின் பக்கவிளைவுகளில் இருந்தும் கூந்தலைக் காக்கிறது. தேங்காய் எண்ணெய்யால் கூந்தலின் வேக்காலினுள் ஊடுருவ முடியும். ஆகையால் தான் நாம் மேல்புறத்தை ஷாம்பூ கொண்ட அலசினாலும் கூட மயிர்க்காலுக்குள் செல்லும் எண்ணெய் தொடர்ந்து கேசத்துக்கு ஒரு குடை போல் அமைந்து பாதுகாப்பு தருகிறது.
தேங்காய் எண்ணெய் பற்றிய இந்தத் தகவல் பொய் என்றால்.. அது எது?
என்னிடம் நிறைய பேர் ஒரு வாதத்தை முன்வைத்துள்ளனர். எனது கேசம் இயற்கையாகவே எண்ணெய்த் தன்மை கொண்டது. அதனால் எனக்கு எண்ணெய் தேவையில்லை என்பதே அவர்கள் கூறும் கருத்து. இது முற்றிலும் தவறானது. இயற்கையான சீரம் என்பது வேறு தேங்காய் எண்ணெய்யால் கிடைக்கு சீரம் என்பது வேறு. தேங்காய் எண்ணெய்க்கு புண், எரிச்சல் ஆகியவற்றை சரி செய்யும் தன்மை உண்டு. அது ஒரு இயற்கையான ப்ரீ கண்டிஷனர் என்றுதான் சொல்ல வேண்டும். ஆகையால் எல்லோருமே தேங்காய் எண்ணெய் தேய்க்க வேண்டும்.
சந்தையில் கிடைக்கும் மற்ற எண்ணெய்க்கும் தூய தேங்காய் எண்ணெய்க்கும் இடையே என்ன வித்தியாசம் உள்ளது?
தேங்காய் எண்ணெய் அதிக ஆழமாக ஊடுருவக் கூடியது. அது கேசத்துக்கு ஊட்டச்சத்து தருகிறது. ஈரப்பதத்தையும் கொடுக்கிறது. கூந்தலை மிருதுவாக வைத்திருக்க உதவுகிறது. கபாலத்தின் பிஎச் பேலன்ஸை சிறப்பாகப் பேணுகிறது. தேங்காய் எண்ணெய்யில் உள்ள லாரிக் ஆசிட் பூஞ்சை காளான் எதிர்ப்பு திறன் கொண்டது.
கொரோனாவுக்கு பிந்தைய காலக்கட்டத்தில் அழகுக்கு அழகு சேர்க்க சில டிப்ஸ் சொல்ல முடியுமா?
ஒரு பழமொழி உண்டு.. குறைவே நிறைவு. குறைவே சிறப்பானது. கொரோனாவுக்கு பிந்தைய காலம் அதை மக்களுக்கு பாடமாகப் புகட்டியுய்ள்ளது. அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும் நல் வழிகளை நாட அது கற்றுக் கொடுத்திருக்கிறது. இஞ்சி, மஞ்சள் ஆகியன மக்களின் அதிக பயன்பாட்டுக்கு வந்துள்ளது. புறத்தோற்றத்துக்கும் தேங்காய் எண்ணெய், கற்றாழை ஆகியனவற்றை நாடுகின்றனர். ஆன்ட்டிஆக்ஸிடன்ட் நிறைந்த பொருட்களை நிறைவாக உண்ண வேண்டும். போதிய அளவு தூக்கம் வேண்டும். இவை இருந்தாலே ஆரோக்கியமாக அழகாக இருக்கலாம்.
தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு எப்படி கேசத்துக்கான எண்ணெய்யை நாமே எப்படித் தயாரிக்கலாம்?
தேவையான பொருட்கள்
* 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்
* வெந்தயம், கடுகு, கருவேப்பிலை எல்லாம் தலா அரை டீஸ்பூன். இவை எல்லாவற்றையும் ஒரு மணி நேரம் தேங்காய் எண்ணெய்யில் ஊற வைத்துவிட்டு பின்னர் வடிகட்டிக் கொள்ளவும்.
* தேன் ஒரு மேஜைக் கரண்டி
* ஆப்பிள் சிடார் வினிகர் ஒரு மேஜைக்கரண்டி
எப்படிச் செய்வது?
* வடிகட்டிய எண்ணெய்யையும் தேனையும் அடுப்பில் ஒரு அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி இரண்டு ஒன்றோடு ஒன்று கலக்கும்படி செய்யவும்.
* பின்னர் அதை வேறு ஒரு பாத்திரத்துக்கு மாற்றி அதில் ஆப்பிள் சிடார் வினிகரை ஊற்றவும்.
* ஒரு பிரஷ்ஷைக் கொண்டு கலக்கவும்.
* கூந்தலில் தேய்த்து 20 நிமிடங்கள் ஊறவிடவும்.
* பின்னர் அதிக வேதிப் பொருட்கள் இல்லாத ஷாம்பூ கொண்டு வெதுவெதுப்பான நீரில் அலசவும்
* தலையை நன்றாகக் காயவைக்கவும். மிகக் குறைவான அளவு எண்ணெய்யை தலையில் பூசிக் கொள்ளவும். கூந்தல் கறுமையாக பளபளப்பாக இருக்கும்.