தயங்கி, பதட்டப்பட்டு, கொஞ்சம் மகிழ்ச்சி , கொஞ்சம் அச்சம் என அத்தனைக்கும் நடுவே பார்ட்னர்களுக்கிடையே முதன்முதலாக செக்ஸ் என்பது நிகழ்ந்து முடிந்தாலும் அது குறித்த தயக்கமும் பதட்டமும் குழப்பங்களும் அதோடு முடிந்திவிடுவதில்லை. அதன்பிறகு தொடர்ச்சியான அடுத்தடுத்த உடலுறவு பார்ட்னர்களிடையே உடல் ரீதியான மாற்றத்தையும் உண்டு பண்ணும். ஆனால் அது உடலில் எந்த மாதிரியான மாற்றம் என்பது தெரியாததாலேயே சிலருக்கு செக்ஸ் குறித்த மன அழுத்தம் ஏற்படலாம். மார்புப் பகுதியில் சிறியதாகக் கொப்புளம் வந்தால் கூட செக்ஸ்தான் காரணமோ எனத் தயங்குவார்கள். பாதுகாப்பான செக்ஸுக்குப் பிறகும் கூட மாதவிடாய் வரும் வரை பதட்ட நிலையிலேயே இருக்கும் பெண்கள் இங்கு பலர் இருக்கிறார்கள். செக்ஸுக்குப் பிறகான உடலில் ஏற்படும் மாற்றம் குறித்த புரிதல் இல்லாமையே இதற்குக் காரணம். 
 
அடிக்கடி உடலுறவு கொள்ளும் நிலையில் உடலில் என்ன மாதிரியான மாற்றம் ஏற்படும்?
மார்பகங்கள் வலுவாகும்...


கிளர்ச்சி அடைவதால் நரம்பு மண்டலத்தில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும் இதன் காரணமாக மார்பகங்கள் வலுவடைந்து 25 சதவிகிதம் வரை பெரிதாகும். கிளர்ச்சி அடைவதின் அளவினைப் பொறுத்து மார்பகங்கள் வலுவடையும் தன்மை மாறுபடும் என்கிறார் பாலியல் நிபுணர். 

முளைகளில் உணர்வு அதிகரிக்கும்


அதிக செக்ஸ் காரணமாக உடலின் சில பகுதிகளில் ரத்த ஓட்ட தூண்டப்பட்டு தசை அழுத்தம் அதிகரிக்கும். குறிப்பாக முளைக்காம்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள ஏரியோலா பகுதிகளில் இந்த அழுத்தம் அதிகரிக்கும். இதனால் உடலில் சிலிர்ப்பு ஏற்பட்டு உச்சமடைவது ஏற்படும். இதோடு மட்டுமல்லாமல் முளைக்காம்பில் உணர்வு அதிகரிக்கும் அதன் காரணமாக செக்ஸ் குறித்த சிந்தனை ஏற்பட்டாலே அவை கடினமடைய வாய்ப்பு உண்டு என்கிறார்.


ஹார்மோன்கள் மகிழ்ச்சியை கூட்டும்


செக்ஸ் உடலில் ஆக்ஸிடோஸின் அளவை அதிகரிக்கும். அது மகிழ்ச்சிக்கான ஹார்மோன். உடலுறவின் சமயத்தில் பெண்களில் இந்த ஹார்மோன் சுரப்பு அதிகமாகவே இருக்கும். இதோடு அல்லாமல் டோபமைன் என்னும் ஹார்மோன் நம்பிக்கையை அதிகரிக்கும், டெஸ்டோஸ்டெரோன் என்னும் ஹார்மோன் மனவலிமையைக் கொடுக்கும்.


கருப்பை மற்றும் பெண்ணுறுப்பு சிறப்பாகச் செயல்படத் தொடங்கும்


உடலுறவின் போது கிளிட்டாரிஸ் வீக்கமடையும் கருப்பை விரிவடையும், இது அடுத்த முறை உடலுறவு கொள்ளும்போதும் தானாகவே நிகழும்.


பிறப்புறுப்பு எலாஸ்டிக் தன்மை உடையதாக மாறும்


உடலுறவில் கிளர்ச்சி அடைவதன் காரணமாக பிறப்புறுப்பின் இதழ்கள் விரிவடையத் தொடங்கும்..இது ஒவ்வொரு முறையும் நிகழ்வதால் ஆணுறுப்பு உள்ளே நுழைவதை அது எளிதாக்கும். இது செக்ஸில் வலி ஏற்படும் என்கிற அச்சத்தைப் போக்கும்.


லூப்ரிகண்ட்கள்


பெண்கள் செக்ஸ் வைத்துக்கொள்ளத் தொடங்கியதற்குப் பிறகு பிறப்புறுப்பு ஈரமடைவது ஒவ்வொரு சூழலிலும் மாறுபடத் தொடங்கும், அவர்களது மனநிலை மற்றும் மாதவிடாய் சூழலைப் பொறுத்து இது மாறுபடும்.