வயர்ட் ப்ரா அணிந்தால் மார்பகப் புற்றுநோய் வரும் என்று கூறப்படும் நிலையில் இது குறித்து டாக்டர் டான்யா இன்ஸ்டாகிராமில் விளக்கமளித்திருக்கிறார்.


மார்பகப் புற்றுநோய் பெண்களை அதிகமாக பாதிக்கும் புற்று வகையாகும். ஆரம்ப கட்டத்தில், மார்பக புற்றுநோய் எந்த அறிகுறிகளையும் காட்டாது. கண்ணுக்குத் தெரியும் மாற்றங்கள் மார்பகங்களில் ஏற்பட்டால் அல்லது மார்பில் கட்டி போல உறுதியாக தோன்றினால் கூட, புற்றுநோய் பாதிப்பாக இருக்குமோ என்ற சந்தேகம் பெரிதாகத் தோன்றாது. அதே நேரத்தில், பல மார்பக புற்றுநோயாளிகளுக்கு கட்டி இருப்பது உண்மைதான் என்றாலும், எல்லா கட்டிகளும் புற்றுநோயாக இல்லை. எனவே மற்ற அறிகுறிகளையும் அறிகுறிகளையும் அறிந்து கொள்வது அவசியம்.


மார்பகப் புற்றுநோயின் ஆரம்ப கட்டங்களில் கட்டி சிறியதாக இருந்தால், தொட்டால் சாதாரண கட்டி போல தெரியும். அதனால்தான் மேமோகிராம்கள், மார்பக புற்றுநோயை கண்டறிவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.


மேமோகிராம்கள் மார்பகத்தில் ஒரு கட்டி பெரிதாக்குவதற்கு முன்பு கண்டறிய உதவும் கருவி. அமெரிக்கன் கேன்சர் சொசைட்டியின் கூற்றுப்படி, வழக்கமான மேமோகிராம்கள் மார்பக புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிய மிகவும் நம்பகமான வழியாகும். ஆனால் உங்கள் மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்கள் மீதும் கவனம் செலுத்த வேண்டியதும் அவசியம்.


புற்றுநோய்க்கு முதல் சிகிச்சையாக அறுவை சிகிச்சை மட்டுமே இருந்து வந்துள்ளது. இப்போது நவீன கதிவீச்சு கருவிகள் மூலம் புற்றுநோய் செல்களை அளிப்பதற்கு புதிய முறைகள் கண்டறியப்பட்டுள்ளது. மார்பகத்தில் அளவு, வடிவம், தோலின் நிறம் ஆகியவற்றை கொண்டு மார்பக புற்றுநோய் பரிசோதிக்கப்படும். மேலும் அக்குள் பகுதியில் ஏற்படும் கட்டி, மார்பகத்தில் ஏற்படும் தோலின் நிறம் மாறுதல், மார்பக தோலில் தடிப்பு இருப்பதை சார்ந்து மேமோகிராம், எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்து கட்டியில் அளவு, தன்மைக்கு ஏற்ற சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்.






ப்ராவும் புற்றுநோயும்.. 


எப்போதுமே இறுக்கமான ஆடையை அணியக் கூடாது. அது உடலுக்குப் பல்வேறு உபாதைகளை ஏற்படுத்தும். அதுவும் பெண்கள் இறுக்கமான ப்ராவை அணிந்து கொள்வதால் ஏற்படும் அசவுகரியங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவே 2011 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் அக்டோபர் 13 ஆம் தேதி நோ ப்ரா டே கடைபிடிக்கப்படுகிறது. பெண்கள் மத்தியில் இதுக்குறித்த விழிப்புணர்வு மற்றும் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பது போன்ற விழிப்புணர்வினை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக தான் இந்த நோ பிரா டே அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் தான் சமூக வலைதளங்கள் வயர்ட் ப்ரா அணிவதால் மார்பக புற்றுநோய் உருவாகும் என செய்திகள் கிளம்ப அதற்கு விளக்கமளித்துள்ளார் டாக்டர் டான்யா. ப்ரா அணிவதும், அணியாததும் அவரவர் விருப்பம். வயர்ட் ப்ரா ஒருவித அழுத்தத்தை தருவதால் வலி ஏற்படலாம். ஒருவேளை உங்களுக்கு அது சவுகரியமாக இருந்தால் நீங்கள் அதனை அணிந்து கொள்ளலாம் என்றார்.