வைன் உடலுக்கு நல்லதா இல்லையா என்கிற சர்ச்சை பலவருட காலங்களாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.சிலர் வைன் உடலுக்கு நல்லதில்லை என்கின்றனர். சிலர் மாற்று கருத்தை முன்வைக்கின்றனர். ரெட் வைனில் இருக்கும் ரிஸர்வட்ரால் எனப்படும் ஒருவகை பாலிஃபீனால் தான் அதன்மீதான் இந்த விவாதத்துக்குக் காரணம்.
பொதுவாக திராட்சையின் தோலில் இருந்துதான் ரெட் வைன் தயாரிக்கப்படுகிறது. அப்படித் தயாரிக்கப்படும் ரெட் வைனில் இருக்கும் இந்த பாலிஃபீனால் ரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது.
சில ஆய்வுகள் இதனை உண்மை என்று சொன்னாலும் மற்ற சில ஆய்வுகள் இந்த பாலிஃபீனாலுக்கும் இதயத்தை பாதுகாப்பதற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என மறுக்கின்றன.
வைனில் இருக்கும் ஒருவகை ஆன்டி ஆக்ஸிடெண்ட்கள்தான் இதயத்தை வலுவாக்குகின்றன. இதயத்தின் மெல்லிய மேல் பகுதியின் மீது இவை செயல்படுகின்றன. மேலும் இவை நல்ல கொழுப்பு மற்றும் தீய கொழுப்பின் மீதும் செயலாற்றுவதாகச் சொல்லப்படுகிறது. ரெட் வைன் இதயத்தைப் பாதுகாப்பதாகப் பல ஆய்வுகள் சொன்னாலும் அவை முழுவதுமாக அதனை ஆதரிக்கவில்லை. எது எப்படியோ அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் கூட நஞ்சுதானே!