பனிக்காலம் என்றாலே பிரெஷ்ஷான சில காய்கறிகளுக்குப் பஞ்சமிருக்காது. கேரட், முட்டைக்கோஸ், வெள்ளை முள்ளங்கி, மற்றும் இதர பச்சைக்காய்கறிகள் இதில் அடக்கம். இந்தக் காய்கறிகளை உணவில் சேர்ப்பது உடலுக்கு நல்லது. இவற்றில் வெள்ளை முள்ளங்கி மிக முக்கியமானது.


முள்ளங்கி ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.அதோடு மட்டுமல்லாமல் எதிர்ப்புசத்தை அதிகரித்து ரத்த நாளங்களை வலுப்படுத்தும். சாலட்டில் சேர்ப்பது, பொறியலாகச் சாப்பிடுவது அல்லது பராத்தாவாகச் சமைத்துச் சாப்பிடுவது என பல்வேறு வகைகளில் இதனை உட்கொள்ளலாம். 


வெள்ளை முள்ளங்கியின் பலன்கள்


ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும்: வெள்ளை முள்ளங்கியில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதால் உயர் மற்றும் குறைவான ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்கள் இதனை உட்கொள்வது மிகவும் நல்லது. 



எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும்: வெள்ளை முள்ளங்கியில் வைட்டமின் சி உள்ளது. இது எதிர்ப்புசத்தை அதிகரித்து சளி, காய்ச்சல், இருமல் போன்ற பிரச்னைகளை ஏற்படாமல் கட்டுப்படுத்துகிறது. இதுதவிர வீக்கம் மற்றும் அதனால் ஏற்படும் வலி ஆகியவற்றையும் இது குறைக்கிறது.


இதயத்துக்கு முள்ளங்கி கேரண்டி: முள்ளங்கியில் ஆந்தோசயனின்ஸ், ஃபாலிக் ஆசிட், ஃபாளாவினாய்ட்ஸ் ஆகியவை உள்ளன. இதில் ஆந்தோசயனின்ஸ் இதயத்தில் எந்த குறைபாடும் ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறது. ஃபாலிக் ஆசிட் மற்றும் ஃபாளாவினாய்ட்ஸ்கள் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை கட்டுப்பாட்டில் வைக்கிறது.


ரத்தநாளங்களை வலுப்படுத்துகிறது: முள்ளங்கியில் இருக்கும் கொலாஜன் ரத்த நாளங்களை வலுப்படுத்துகிறது. இதனால் ஆதெரோஸ்க்ளீராய்சிஸ் போன்ற தீவிர தொற்றுகளை இது கட்டுப்பாட்டில் வைக்கிறது. 


செரிமானத்தை சீராக்கும்: தினமும் முள்ளங்கி சாப்பிடுவதால் உடலில் செரிமானம் சீராகும். இதனால் உடல் பருமன, வாய்வுப் பிரச்னை, குமட்டல், அசிடிட்டி போன்ற பிரச்னைகள் உண்டாவது குறையும்.


முள்ளங்கியில் செய்யக்கூடிய சில சுவாரசிய ரெஸிப்பிக்கள் கீழே: