தினசரி ஒரு கப் தேநீர் வாழ்க்கையின் பிற்பகுதியில் நமது ஆரோக்கியமான வாழ்க்கையை மேம்படுத்த உதவும். அதில் இருக்கும் ஃப்ளேவனாய்ட்கள்தான் அதற்குக் காரணம்.. இருப்பினும் நீங்கள் தேநீர் குடிப்பவர் இல்லையென்றால் உங்கள் உணவில் நீங்கள் சேர்க்கக்கூடிய ஃப்ளேவனாய்ட் கொண்ட பிற விஷயங்கள் உண்டு. அவை இயற்கையாகவே தேயிலை, ஆப்பிள், கொட்டைகள், சிட்ரஸ் பழம், பெர்ரி மற்றும் ஆகியவற்றில் காணப்படுகின்றன. இவை பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன. இருப்பினும், நியூ எடித் கோவன் பல்கலைக்கழகம் நடத்திய புதிய ஆராய்ச்சியில் அதுகுறித்த மேலும் பல சுவாரசியத் தகவல்கள் நமக்குக் கிடைக்கின்றன.
ஹார்ட் அறக்கட்டளை என்கிற அமைப்பு வயதான பெண்கள் 881 பேரில் ஒரு ஆய்வை நடத்தியது. அவர்களின் சராசரி வயது 80. அவர்கள் உணவில் அதிக அளவு ஃபிளாவனாய்டுகளை உட்கொண்டால், அப்டாமினல் அயோட்டிக் கால்சிஃபிகேஷன் எனப்படும் வயிற்றுப் பெருநாடியில் நிகழும் ஒருபித செயல்பாடு விரிவாக உருவாகுவது மிகக் குறைவு என்று கண்டறியப்பட்டது.
அப்டாமினல் அயோட்டா என்பது உடலின் மிகப்பெரிய தமனி, இது இதயத்திலிருந்து வயிற்று உறுப்புகள் மற்றும் கால்களுக்கு ஆக்ஸிஜனேற்றப்பட்ட இரத்தத்தை வழங்கும் . மேலும் இது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற இருதய அபாயங்களை முன்னறிவிப்பதாகும்.
வயதானவர்களில் ஏற்படும் டிமென்ஷியா எனப்படும் ஞாபக மறதி நோயைக் கண்டறியவும் இது உதவுகிறது. எடித் கோவன் பல்கலைக்கழக ஊட்டச்சத்து மற்றும் சுகாதார கண்டுபிடிப்பு ஆராய்ச்சி நிறுவன ஆராய்ச்சியாளர் பென் பார்மென்டர் கூறுகையில், பல உணவுகளைகளில் ஃப்ளேவனாய்ட்கள் அதிக் அளவில் தென்படுகிறது எனக் குறிப்பிடுகிறார்.
"பெரும்பாலான மக்களில், ஒரு குறிப்பிட்ட உணவில் ஃபிளேவனாய்டுகள் இருப்பது மொத்த உணவு ஃபிளாவனாய்டு உட்கொள்ளலின் பெரும்பகுதியில் பங்களிக்கின்றன," என்று அவர் கூறினார்.
"முக்கியமாகத் தேநீர், அவுரிநெல்லிகள், ஸ்ட்ராபெர்ரி, ஆரஞ்சு, சிவப்பு ஒயின், ஆப்பிள், திராட்சை, காய்ந்த திராட்சை மற்றும் டார்க் சாக்லேட்" ஆகியன ப்ளேவனாய்ட்கள் அதிகம் தென்படும் உணவு என்கிறார் அவர்.
ஃபிளவன் -3-ஓல்ஸ் மற்றும் ஃபிளாவனோல்கள் போன்ற பல வகையான ஃபிளாவனாய்டுகள் உள்ளன. பிளாக் டீ மொத்த ஃபிளாவனாய்டுகளின் ஆய்வின் முக்கிய ஆதாரமாக இருந்தது. தேநீர் குடிக்காத நபர்களுடன் ஒப்பிடும்போது, ஒரு நாளைக்கு இரண்டு முதல் ஆறு கோப்பைகள் தேநீர் பருகிய பங்கேற்பாளர்கள் 16-42 சதவீதம் பேர் மட்டுமே விரிவான ஏஏசி இருப்பதற்கான வாய்ப்பைக் கொண்டிருந்தனர்.
இந்த ஏஏசி என்பது இரத்த நாள நோய் நிகழ்வுகளின் முக்கிய அறிகுறிகளைக் குறிப்பது ஆகும். மேலும் இந்த ஆய்வு ஏஏசியில் இருந்து நம்மைப் பாதுகாக்கக்கூடிய ,ஃபிளாவனாய்டுகளை தினமும் உட்கொள்வது பெரும்பாலான மக்களின் உணவுகளில் சாத்தியமானது என்பதைக் காட்டுகிறது.