Share Market opened : வாரத்தின் முதல் நாளான இன்று பங்கு சந்தையானது சரிவுடன் தொடங்கியுள்ளது.
இன்று காலை தொடங்கிய பங்கு சந்தையில், மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 156.76 புள்ளிகள் சரிந்து 62,711.74 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 38.95 புள்ளிகள் சரிந்து 18,657.15 புள்ளிகளாக உள்ளது.
கடந்த வாரம் நான்கு நாட்களும் பங்குச்சந்தையானது ஏற்றத்தில் இருந்தது. இதனால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால் தற்போது பங்குச்சந்தையானது சரிவில் தொடங்கியுள்ளது.
லாபம்-நஷ்டம்
நெஸ்ட்லே, டிசிஎஸ், டெட்டன் கம்பெனி, பாரதி ஏர்டெல், பிரிட்டானியா, அதானி எட்டர்பிரிஸ், ரிலையன்ஸ், எம்&எம், சன் பார்மா, டாடா கான்ஸ், சிப்ளா, கோடக் மகேந்திரா, எச்டிஎஃப்சி வங்கி, ஐடிசி, பஜாஜ் ஆட்டோ, பிபிசிஎல், டாடா மோட்டார்ஸ், மாருதி சுசிகி, எச்சிஎல் டெக், அப்போலோ மருத்துவமனை, லார்சன், இன்ஃபோசிஸ், டெக் மகேந்திரா, பஜாஜ் பின்சர்வு உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.
டாடா ஸ்டீல், யுபிஎல், கிராசிம், விப்ரோ, கோல் இந்தியா, எஸ்பிஐ, ஓஎன்ஜிசி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.
சீனாவில் கொரோனா தாக்கம் முழுமையாக முடியவில்லை. பொருளாதாரம் இயல்பு நிலைக்கு வரவில்லை என்ற கவலை முதலீட்டாளர்களுக்கு இருக்கிறது என கூறப்படுகிறது. கச்சா எண்ணெய் விலையிலும் பெரும் தாக்கம் ஏற்பட்டது. இதனால், கச்சா எண்ணெய் விலை குறையும் சூழல் நிலவுகிறது.
ரூபாய் மதிப்பு:
இன்று டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிக்கும் சூழல் நிலவுகிறது. இந்நிலையில், அமெரிக்க டாலருக்கு எதிரான, இந்திய ரூபாய் மதிப்பானது 8 காசுகள் அதிகரித்து 81.25 ரூபாயாக ஆக உள்ளது.