கணவன் மனைவி இடையே அன்பைப் பரிமாறுவதில் முக்கிய அங்கம் ஒருவர் காலை ஒருவர் பிடித்துவிடுவதில் உள்ளது. உறங்கச் செல்வதற்கு முன்பு தனது மனைவியின் காலைப் பிடித்துவிடும் கணவர்களை மனைவிமார்கள் சற்று அதீதமாகவே நேசிப்பார்கள் எனலாம்.
பல நூற்றாண்டுகளாக, பல கலாச்சாரங்களில் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்த கால் மசாஜ் நடைமுறையில் உள்ளது. கால் மசாஜ் என்பது உலகெங்கிலும் மில்லியன் கணக்கானவர்களால் பயன்படுத்தப்படும் ஒரு மருத்துவ வடிவமாகும். இருப்பினும், கால் மசாஜ் வழங்கும் பல நன்மைகளைப் பற்றி பலர் அறிந்திருக்கவில்லை. அப்படி பாதங்களை மசாஜ் செய்வதால் ஏற்படும் நன்மைகள்...
1. இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது: உட்கார்ந்தபடியேயான வாழ்க்கை முறையால் மனித உடலில் இரத்த ஓட்டம் குறைகிறது. வழக்கமான கால் மசாஜ் கால்களுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது மற்றும் கால்களுக்கு இரத்த விநியோகத்தை அதிகரிப்பதன் மூலம் இதய நோயைத் தடுக்கிறது. கால் மசாஜ்கள் கால்களில் வீங்கி பருத்து வலிக்கும் நரம்புகள் உருவாகும் வாய்ப்பைக் குறைக்கின்றன என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
2. கால் வலியை நீக்குகிறது
கால் நோய்களுக்கான அறிகுறியை அகற்ற ஒரு மாதத்திற்கு தொடர்ச்சியாகக் கால் மசாஜ் செய்யுங்கள். உறங்கும் முன் வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயைக் கொண்டு பாதங்களை மசாஜ் செய்வது நரம்புகளைத் தளர்த்துவதில் பயனுள்ளதாக இருக்கும், இது கால் நோய்க்குறியிலிருந்து நம்மை விடுபடச் செய்கிறது.
3. இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது, தூங்குவதற்கு பத்து நிமிடங்களுக்கு முன் பாதங்களை மசாஜ் செய்வதன் நன்மைகளில் ஒன்று, பதட்டம் குறைவது, மனநிலை மேம்படும், உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பது.
4. உடல் அமிலங்களை நீக்குகிறது
கடுமையான உடற்பயிற்சியின் போது, தசைகளில் லாக்டிக் அமிலங்கள் உருவாகின்றன. ஒவ்வொரு இரவும் 20 நிமிட கால் மசாஜ் இந்த லாக்டிக் அமிலங்களை நீக்குகிறது. இந்த லாக்டிக் அமிலத்தை சிகிச்சை அளிக்காமல் விட்டுவிடுவது மற்ற கால் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இந்த அமிலம் அதிகரிக்கும்போது, தசைகள் சோர்வடைந்து, திறம்பட சுருங்காமல் போகலாம். உடற்பயிற்சியின் போது, சிலருக்கு தசைகளில் எரியும் உணர்வு ஏற்படும். இதனை மசாஜ் தடுக்கிறது.
5. கர்ப்பிணிப் பெண்களுக்கு மசாஜ் அவசியம். கர்ப்பத்தின் இறுதி மூன்று மாதங்களில், வீங்கிய பாதங்களில் சேரும் திரவம் சிறுநீரகங்களுக்கு மீண்டும் திரும்புவதற்கு உதவுவதற்காக கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் கால்களை மசாஜ் செய்ய வேண்டும். இது வீக்கத்தைக் குறைக்க உதவும்
6. தூக்கத்தைச் சீராக்குதல்
மசாஜ் செய்வது ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதால் அது தூக்கத்தை சீராக்குகிறது. இதனால் தூக்கப் பிரச்னை உள்ளவ்ர்களுக்கு நாளடைவில் அந்தப் பிரச்னை குறைகிறது.