ரத்தத்தில் இருக்கும் நச்சுக்களையும், கழிவுகளையும் நீக்குவது மட்டுமின்றி, செரிமானத்தின்போது உறிஞ்சிக் கொண்ட சத்துகளை உடல் முழுவதும் ரத்தத்தில் கலக்கும் பணியில் ஈடுவதும் கல்லீரல் தான். உடலின் பிற உறுப்புகளை விட, அதிகளவிலான வேலைகளைச் செய்வதுடன் உடலின் சூப்பர் உறுப்பாக இருப்பதும் கல்லீரல்.
உங்கள் கல்லீரல் ஆரோக்கியத்தைப் பேண இந்த ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் பழக்கங்களை பின்பற்றுங்கள். கல்லீரல் பாதிப்புகளால் ஏற்படும் விளைவுகளை அனுபவிக்கும் போது, தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
சூப்பர் உறுப்பு கல்லீரல்:
சூப்பர் உறுப்பு கல்லீரலின் மொத்த பயன்களாக 500 பயன்கள் பட்டியலிடப்படுகின்றன. நான் உண்பது உணவு, மது, விஷம் என எதுவாக இருந்தாலும் அதன் மீது செயலாற்றுவது கல்லீரலின் முதன்மைப் பணி. எனவே நாம் உண்ணும் நச்சுப் பொருள்கள் அனைத்துமே கல்லீரலால் உறிஞ்சிக் கொள்ளப்படுகின்றன. மேலும் ரத்தத்தில் ஏற்படும் தொற்றுகளும் கல்லீரலைப் பாதிக்கின்றன.
கல்லீரலின் சில முக்கியப் பணிகள்
1. கல்லீரல் தான் உடலின் நச்சுக்களை வெளியேற்றுகின்றன
2. இது செரிமானத்திற்கு உதவுகிறது. பைல் எனப்படும் ஃப்ளூயிட் சுரப்பதும் இங்குதான்.
3. இது புரத தொகுக்காக்கத்திற்கு உதவுகிறது
4. ஹார்மோன்கள் டீடாக்ஸிபிகேஷனுக்கும் பயன்படுகிறது.
கல்லீரல் பாதிப்புகளின் ஒவ்வொரு படிநிலை பாதிப்பும் இதய நோய்களின் ஆபத்தைப் படிப்படியாக ஏற்படுத்துகிறது. இதனால் கல்லீரல் செயல்படாமல் போகும் போது, மாரடைப்பு ஏற்படுகிறது. எனவே ஆரோக்கியமான உணவுப் பழக்கம், சர்க்கரை அளவைக் குறைவாக உட்கொள்ளுதல், புகைப்பிடித்தல், மது முதலான பழக்கங்களைத் தவிர்த்தல், உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுதல் முதலானவற்றின் மூலம் கல்லீரைலைப் பேணலாம்.
ஆசனா :
யோகாசனம் மூலம் கல்லீரல் ஆரோக்கியத்தைப் பேணலாம். கல்லீரலை வலது பக்கமாக சுழற்றும் பயிற்சியை செய்யலாம் ஆனால் இதை அதிக அழுத்தம் கொடுக்காமல் செய்ய வேண்டும்.
மூலிகைகள் மற்றும் உணவு:
கசப்பான மற்றும் ஆஸ்ட்ரின்ஜன்ட் உணவுகள் கல்லீரல் நலன் காக்கும். பாகற்காய், பீட்ரூட், கசப்புத் தன்மை கொண்ட கீரை வகைகள் ஆகியன கல்லீரலை சுத்தப்படுத்தும். அகத்திக் கீரை, வெந்தயக் கீரை ஆகியன கல்லீரல் நலத்திற்கு உகந்ததாகப் பட்டியலிடப்படுகிறது.