ஆஸ்கைட் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள்  அதாவது அடிவயிற்றில் உள்ள இடைவெளிகளில் திரவம் சேகரிக்கும் நிலையில் இருப்பவர்களுக்கு ஆயுர்வேத பாலி-ஹெர்பல் மருந்து மூலம் சிகிச்சையளிக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.கல்லீரல் சரியாக வேலை செய்வதை நிறுத்தும் போது அல்லது அது செயலிழந்தால், வயிற்றுப் புறணிக்கும் உறுப்புகளுக்கும் இடையே உள்ள இடைவெளியில் திரவம் தேங்குவதற்கு வழிவகுத்து ஆஸ்கைட்ஸ் பொதுவாக ஏற்படுகிறது.ஆஸ்கைட்டால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அடிவயிற்றில் வலியற்ற வீக்கம் போன்ற அறிகுறிகளைக் கொண்டிருக்கலாம்,வயிற்று அசௌகரியம்; எடை அதிகரிப்பு; சிறிது சாப்பிட்ட பிறகு நிரம்பிய உணர்வு, அடிவயிற்றில் அழுத்தம் அதிகரிப்பதால் மூச்சுத் திணறல் போன்றவை இந்த நோயின் தீவிர அறிகுறிகள். இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களின் உயிர் பிழைக்கும் விகிதம் 50 சதவிகிதம் என்கிறனர் மருத்துவர்கள்.




சிறுநீரக பிரச்சனைக்கான ஆயுர்வேத மருந்து:


ஆயுர்வேதா மற்றும் ஒருங்கிணைந்த மருத்துவ அறிவியல் இதழின் சமீபத்திய இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், கர்நாடகாவில் உள்ள ஜேஎஸ்எஸ் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் உதவிப் பேராசிரியர் கோமலா ஏ, சித்தேஷ் ஆராத்யமத் மற்றும் ஆராய்ச்சியாளர் மல்லிநாத் ஐடி ஆகியோர் AIMIL Pharmaceutical's Innovation க்கான ஆயுர்வேத மருந்தினை கண்டறிந்துள்ளனர். இந்த மருந்து நாட்பட்ட சிறுநீர்க பிரச்சனையை மெல்ல மெல்ல குறைப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.


ஆராய்ச்சியில் வெற்றி :


சிறுநீர்க கோளாறு கொண்ட நோயாளிகளுக்கு தினசரி 20 மில்லி அளவு  காலை மற்றும் மாலை என்ற வீதத்தில் கொடுக்கப்பட்ட மருந்தின் அடிப்படையில்  அவர்கள் குணமாவதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.சிறுநீரகங்களை இந்த நிலை காரணமாக மேலும் சேதமடையாமல் பாதுகாக்க உதவியது மட்டுமல்லாமல், அவர்களின் வயிற்றில் இருந்து சேகரிக்கப்பட்ட திரவத்தை வெளியேற்றவும் உதவியாக இருந்திருக்கிறது.மூலிகை தயாரிப்பின் நுகர்வு வயிற்றுப் பகுதியிலிருந்து சிறுநீர் பாதை வழியாக திரவத்தை வெளியேற்றியது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.




என்ன மூலிகை :


NEERI-KFT என்னும் தாவரங்களிலிருந்து பிரித்தெடுக்கப்படும் மூலிகை மருந்து, புனர்னவா, வருண், சிக்ரு, சரிவா, மகோய் மற்றும் சிரிஷ் போன்ற மூலிகைகளால் ஆனது, அவை டையூரிடிக் பண்புகளுக்கும் பெயர் பெற்றவை.AIMIL பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சஞ்சித் ஷர்மா   இது குறித்து கூறுகையில் "கடந்த சில ஆண்டுகளில் நீரி KFT சிறுநீரகத்தை வலுப்படுத்துவதிலும், உடலில் இருந்து நச்சு திரவங்களை அகற்றுவதிலும் பயனுள்ளதாக இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. " என தெரிவித்தார்.