நாள்: 13.07.2022


நல்ல நேரம் :


காலை 10.45 மணி முதல் 11.45 மணி வரை


கௌரி நல்ல நேரம் :


மதியம் 12.15 முதல் மதியம் 1.15 வரை


மாலை 6.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை


இராகு :


மதியம் 1.30 மணி முதல் மதியம் 3 மணி வரை


குளிகை :


காலை 9 மணி முதல் காலை 10.30 மணி வரை


எமகண்டம் :


காலை 6 மணி முதல் காலை 7.30 மணி வரை


சூலம் –தெற்கு 


மேஷம் :


மேஷ ராசி நேயர்களே, இன்று தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி பெறலாம். உங்களிடம் காணப்படும் உற்சாகமான போக்கு காரணமாக நீங்கள் உங்கள் செயல்களை எளிதாக ஆற்றுவீர்கள். பணியில் உங்களுக்கு ஏற்படும் திருப்தியான உணர்வு காரணமாக நீங்கள் பணிகளை சரியான நேரத்தில் முடிக்க இயலும்.


ரிஷபம்:


ரிஷப ராசி நேயர்களே, நீங்கள் முன்பு எடுத்த விவேகமான முடிவு காரணமாக இன்று உங்களின் நாள் வெற்றிகரமாக அமையும். உங்களிடம் இன்று உறுதியும் உற்சாகமும் காணப்படும். இன்று பண வரவு காணப்படும். உங்கள் எதிர்கால பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பணத்தை சேமிப்பீர்கள்.


மிதுனம் :


மிதுன ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு எதிர்பாராத நன்மைகள் நடக்கும். என்றாலும் முக்கிய முடிவுகள் எடுக்க இன்று உகந்த நாள் அல்ல.பணிகள் அதிகமாக காணப்படும். உங்கள் பணிகளைக் கையாளும்போது இன்று பொறுமை மேற்கொள்ளவேண்டியது அவசியம்.


கடகம் :


கடக ராசி நேயர்களே, இன்று பாதுகாப்பின்மை உணர்வு காணப்படும். உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும். ஆன்மீக ஈடுபாடு உங்களுக்கு ஆறுதலைத் தரும். உங்கள் தந்தையின் ஆரோக்கியத்திற்காக பணம் செலவு செய்வீர்கள். அதிகரிக்கும் பொறுப்புகள் காரணமாக இன்று சேமிப்பதற்கும் வாய்ப்பு இருக்காது.


சிம்மம்:


சிம்ம ராசி நேயர்களே, இன்று நல்ல பலன்கள் கிடைக்கும் நாள். திட்டமிட்ட முயற்சியும் நேர்மறை எண்ணங்களும் உங்களுக்கு வெற்றியை பெற்றுத் தரும்.இன்று உங்களிடம் கணிசமான பணம் காணப்படும். பணத்தை பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.


கன்னி :


கன்னி ராசி நேயர்களே, இன்று உங்கள் வளர்ச்சிக்கான முயற்சிகளை எடுப்பீர்கள். இன்று உங்களிடம் பதட்டம் காணப்படும். ஆன்மீக ஈடுபாடு உங்களுக்கு ஆறுதல் தரும். உங்கள் மேலதிகாரிகளுடன் நல்லுறவு காணப்படாது. நேர்மையாக பணியாற்றுவது சவாலானதாக இருக்கும்.


துலாம் :


துலாம் ராசி நேயர்களே, இன்று  சிறிது மந்தமாக காணப்படுவீர்கள். திட்டமிட்ட முயற்சியும் செயல்களில் விழிப்புணர்வும் தேவை. இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் குறைவாக இருக்கும். பணிகள் அதிகமாக இருப்பதன் காரணமாக உங்களிடம் கவனக்குறைவு காணப்படும். திட்டமிட்டு கவனமுடன் இருந்தால் சிறப்பாக பணியாற்றலாம்.


விருச்சிகம் :


விருச்சிக ராசி நேயர்களே, இன்று நீங்கள் கடின உழைப்பின் மூலம் வெற்றி காணலாம். ஆன்மீக ஈடுபாடு மற்றும் ஏழைகளுக்கு செய்யும் உதவி மூலம் ஆறுதல் பெறலாம். பணிகள் அதிகமாகவும் சவாலானதாகவும் இருக்கும். வேலை தொடர்பான பயணம் காணப்படும்.


தனுசு :


தனுசு ராசி நேயர்களே, இன்று உங்கள் வளர்ச்சிக்கான முயற்சிகள் எடுக்கலாம். விரைவான செயல்கள் மூலம் வெற்றி காண்பீர்கள். உங்களின் சிறந்த முயற்சி மூலம் உங்கள் செயல்திறனை மேம்படுத்த இயலும். உங்களின் தனித்த திறனும் திறமைகளும் உங்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும்.


மகரம் :


மகர ராசி நேயர்களே,  இன்றைய நாள் சாதகமான பலன்கள் தருவதைக் காண்பீர்கள். சமநிலையோடு இருந்தால் சரியான முடிவெடுத்து வெற்றி காணலாம். இன்று உங்களிடம் அமைதியும் திருப்தியும் காணப்படும். உங்களின் தனித்த திறன் மூலம் நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள். உங்கள் முயற்சிக்கான பாராட்டை உங்கள் மேலதிகாரிகளிடமிருந்து பெறுவீர்கள்.


கும்பம்:


கும்ப ராசி நேயர்களே, இன்று சில ஏமாற்றங்கள் காணப்படும். எந்த விஷயத்தையும் யதார்த்தமாக கையாள வேண்டும். சவாலான சூழ்நிலைகளை எந்தவிதமான எதிர்பார்ப்புமின்றி தைரியமாகக் கையாள வேண்டும். இன்று கூடுதல் செலவுகள் காணப்படும். பண இழப்பு ஏற்படாமல் இருக்க சிறப்பாக திட்டமிட வேண்டும்.


மீனம்:


மீன ராசி நேயர்களே, இன்றைய நாள் உங்களுக்கு அனுகூலமாக இருக்காது. நீங்கள் உணர்ச்சிவசப்ப்டுவீர்கள். இன்று வெற்றி பெறுவதற்கு அமைதியான கட்டுப்படாடான அணுகுமுறை தேவை. திட்டமிட்டு பணியாற்றுவதன் மூலம் பணியில் தவறுகளை தவிர்க்கலாம். என்றாலும் உங்கள் மேலதிகாரிகளிடம் நன்மதிப்பை இழப்பீர்கள்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண