கடந்த 10 ஆண்டுகளில் பிரச்சினைகள் இல்லாமல் வெளிவந்த படம் விக்ரம் என அப்படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன்,விஜய் சேதுபதி, பஹத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள விக்ரம் படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே நேற்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் நடிகர் சூர்யா ரோலக்ஸ் என்ற கேரக்டரில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். இவரே விக்ரம் படத்தின் 3 ஆம் பாகத்திற்கு லீடாக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் படம் வசூலில் உலகளவில் ரூ.300 கோடியை எட்டியுள்ளதால் இதனை கமல் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 






படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குநர் லோகேஷூக்கு காரும், துணை இயக்குநர்களுக்கு பைக்கும், நடிகர் சூர்யாவுக்கு தான் அணிந்திருந்த ரோலக்ஸ் வாட்சும் பரிசளித்து ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார் கமல்ஹாசன். 


இந்நிலையில் விக்ரம் படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் இன்று சென்னையில் உள்ள மெட்ராஸ் கிளப்பில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்  நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், உதயநிதி ஸ்டாலின், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் படத்தின் விநியோகஸ்தர்கள் கலந்து கொண்டனர். இதில் பேசிய நடிகர் கமல்ஹாசன், சினிமாவுலகில் நுழைந்த போது எனக்கு நடிப்பில் பெரிதாக ஆசை இல்லை. ஆனால் நடிக்க ஆசை காட்டியவர் இயக்குநர் சிகரம் பாலசந்தர் தான் என தெரிவித்தார். 






மேலும் கடந்த  10 வருசத்துல எந்த பிரச்சனையும் இல்லாம ரிலீஸ் பண்ண விட்ட படம் இதுதான் என தெரிவித்த கமல், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போன போது எல்லாரும் கிண்டல் பண்ணாங்க. ஆனால் அது படத்தின் ப்ரோமோஷனுக்கு நன்கு உதவியதாகவும் அவர் கூறினார். தொடர்ந்து ரெட் ஜெயன்ட் மூவிஸூடன் பணிபுரிய தான் விரும்புவதாகவும் கமல் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண