கழுத்தில் அமைந்துள்ள தைராய்டு சுரப்பி, உடலில் பல்வேறு வளர்சிதை மாற்ற செயல்முறைகளை ஒழுங்குபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஹைப்பர் தைராய்டிசம் என்பது அந்த தைராய்டு சுரப்பியின் அதிகப்படியான செயல்பாட்டால் வகைப்படுத்தப்படும் ஒரு மருத்துவ நிலை, இது தைராய்டு ஹார்மோன்களின் அதிகப்படியான உற்பத்திக்கு வழிவகுக்கிறது. 


ஹைப்பர் தைராய்டிசம் என்றால் என்ன?


"ஹைப்பர் தைராய்டிசம் என்பது ஒரு ஆட்டோ இம்யூன் நோயாகும், இது முக்கியமாக கிரேவ் நோயால் ஏற்படுகிறது. இதன்மூலம் தைராய்டு சுரப்பி அதிக தைராய்டு ஹார்மோன்களை உற்பத்தி செய்வதால், இது வளர்சிதை மாற்றத்தை கட்டுப்படுத்துவதோடு, இதய துடிப்பு மற்றும் பிற உறுப்பு செயல்பாடுகளையும் பாதிக்கிறது. இது ஆண்களை விட பெண்களிடம் அதிகமாக காணப்படுகிறது, மேலும் இது மரபு மூலமாக அடுத்தடுத்த தலைமுறைக்கு வரலாம்,” என்கிறார் டாக்டர் பிந்துமதி பி எல், சீனியர். இன்டர்னல் மெடிசின், ஆஸ்டர் சிஎம்ஐ மருத்துவமனை, பெங்களூரு. திடீர் எடை இழப்பு, இதயத்துடிப்பு அதிகரிப்பு, ஒழுங்கற்ற மாதவிடாய், பதட்டம், தூங்க இயலாமை மற்றும் பசியின்மை ஆகியவை இதில் கவனிக்க வேண்டிய பொதுவான அறிகுறிகள் ஆகும்.



எதனால் ஏற்படுகிறது?


வைசாக் அப்பல்லோ கிளினிக் பொது மருத்துவர் டாக்டர் இந்திரா பிரியதர்ஷினி சில காரணங்களை விளக்குகிறார்: நோயெதிர்ப்பு அமைப்பு தைராய்டு சுரப்பியைத் தாக்குவதால், அதிகப்படியான தைராய்டு ஹார்மோன்களை அது உற்பத்தி செய்கிறது. தைராய்டிடிஸ் என்பது வைரஸ் தொற்று காரணமாக தைராய்டு சுரப்பிகளில் ஏற்படும் அழற்சி ஆகும். ஒரு குறிப்பிட்ட மருந்து காரணமாகவும் இது கர்ப்பத்திற்குப் பிறகு பெண்களுக்கு ஏற்படலாம் “கழுத்தின் அடிப்பகுதியில் வளர்ச்சி அல்லது வீக்கம் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும். பதட்டம், படபடப்பு மற்றும் ஹைப்பர் தைராய்டிசத்தின் அறிகுறிகள் ஒரே மாதிரி இருப்பதால், அவை தவறாகக் கண்டறியப்படலாம், எனவே மருந்துகளை எடுக்கத் துவங்கும் முன், முழுமையான பரிசோதனைகள் தேவை,” என்கிறார் டாக்டர் பிந்துமதி பி.எல். "பெண்களில், மாதவிடாய் முறைகேடுகள் இதில் அடங்கும். சிலருக்கு கழுத்தில் கோய்ட்டர் எனப்படும் வீக்கமும் இருக்கலாம்,” என்கிறார் டாக்டர் பிரியதர்ஷினி.


தொடர்புடைய செய்திகள்: Crime: 30 குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. 8 ஆண்டுகள் நடந்த வழக்கு.. காம கொடூரனுக்கு ஆயுள்தண்டனை விதிப்பு.!


தீர்வுகள் உண்டா?


இது குணப்படுத்த முடியுமா என்பது பலருக்கு சந்தேகம். ஆனால் ஹைப்பர் தைராய்டிசம் குணப்படுத்தக்கூடியதுதான். பெரும்பாலான நோயாளிகள் வாய்வழி மருந்துகள் எடுத்துக்கொள்வதிலேயே சரியாகிறார்கள். சிலருக்கு மருந்துகளுடன் அறுவை சிகிச்சையும் தேவைப்படுகிறது. ஆனால் டாக்டர் பிரியதர்ஷினி இந்த நிலையைத் தவிர்க்க வேண்டியது அவசியம் என்று கூறுகிறார். அதற்காக அவர் தரும் அட்வைஸில், "நொறுக்குத் தீனி சாப்பிடுவதை தவிர்க்கவும். காஃபின், இறைச்சி, முட்டையின் மஞ்சள் கரு, சோயா மற்றும் டைரி பொருட்கள், மீன், அயோடின் கலந்த உணவு ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். சப்ளிமெண்ட்ஸ் இல்லாத ஆரோக்கியமான மற்றும் சீரான உணவை உண்ணுங்கள். ஆப்பிள், ஓட்ஸ், ஆப்ரிகாட், சிட்ரிக் பழங்கள், க்ரீன் டீ, தயிர், ப்ரோக்கோலி, கொழுப்பு நீக்கிய பால் மற்றும் முட்டைக்கோஸ் போன்றவற்றை எடுத்துக்கொள்வது இந்த நிலை ஏற்படாமல் தடுக்க உதவும்," என்கிறார்.



என்ன செய்ய வேண்டும்?


வழக்கமான உடற்பயிற்சிகள், யோகா மற்றும் புரோபயாடிக்குகள் மற்றும் பச்சை காய்கறிகளை சாப்பிடுவது உதவும். மருத்துவர்களின் வழக்கமான கண்காணிப்புகளும் தடுக்க உதவும். அயோடின் கலந்த உப்பு உட்கொள்வதைத் தவிர்க்கவும்; அமியோடரோன், இண்டர்ஃபெரான்கள் மற்றும் மோனோக்ளோனல் ஆன்டிபாடிகள் போன்ற சில மருந்துகள் ஹைப்பர் தைராய்டிசத்தைத் தூண்டும். டாக்டர் பிந்துமதி பி எல், பேசுகையில், "ஹைப்பர் தைராய்டிசத்திற்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது அரித்மியா, கார்டியோமயோபதி, ஆஸ்டியோபோரோசிஸ், போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது," என்கிறார். ஹைப்பர் தைராய்டிசம் இருப்பது கண்டறியப்பட்டால், தைராய்டு ஹார்மோன் அளவைக் கட்டுப்படுத்தவும், சீரான இடைவெளியில் கண்காணிக்கவும், மருந்துகளை உட்கொள்ளவும் அறிவுறுத்தப்படலாம். சில சந்தர்ப்பங்களில், தைராய்டு சுரப்பியின் ஒரு பகுதியை அகற்ற அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. தைராய்டு நோயை நிர்வகிப்பதில் தைராய்டு பராமரிப்பு ஒரு முக்கிய பகுதியாகும். மருத்துவரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற பரிந்துரைக்கப்படுகிறது.