மனிதனின் மனம் ஒரு குரங்கு எனக் கூறுவது உண்டு. மகிழ்ச்சி, துக்கம், கோபம், இரக்கம் எனப் பல்வேறு மனநிலையிலும் மாறி மாறிப் பயணிக்கும். அந்த மாற்றம் மின்னல் வேகத்தில் நிகழும். சட்டென்று தாவுவதால் தான் மனித மனதை குரங்கு என்றார்களோ என்னவோ? ஆனால் அன்றாடம் உண்ணும் உணவில் உள்ள சில காரணிகள் நம் உள்ளத்தையும் உடலையும் உற்சாகமாக வைத்துக் கொள்ள உதவும். அதை அறிந்து கொள்வோம்.
1. ப்ளூபெரீஸ்
ப்ளூபெரீஸ் பழங்களுக்கு மூளை செயல்பாட்டை தூண்டிவிடும் சக்தி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் நிறைய இருக்கு. இது மூட் சரி செய்வதோடு, நினைவாறலை தூண்டுகிறது. அதுமட்டுமின்றி ப்ளூபெரீஸ் பழங்களில் ஆன்டி இன்ஃப்ளமேட்டரி காரணிகள் உள்ளது. இது பல்வேறு மனநிலை பாதிப்புகளில் இருந்தும் மீள உதவி செய்யும்.
2. தேங்காய்
தேங்காயும் மனநலனைப் பேண உதவும். சில ஆய்வுகளின்படி தேங்காய் மூளை செயல்பாட்டை சீராக்குவதோடு மூளை வயதாவதையும் தடுக்கிறது. தேங்காயை அப்படியேயும் சாப்பிடலாம். இல்லை துருவியோ, பாலாகவோ அருந்தலாம்.
3. தக்காளி
தக்காளி இந்திய சமையல்களில் அதிகமாகவே பயன்படும் பொருள் இது. தக்காளியில் உள்ள லைகோபேன் சிறந்த ஆன்டி ஆக்ஸிடன்ட். இது மனித உடல்நலத்திற்கும் மன நலத்திற்கும் மிகவும் சிறந்தது. தக்காளியின் தோலில் நிறைய ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன.
4. வாழைப்பழம்
வாழைப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் என்று நம் அனைவருக்குமே தெரியும். ஆனால், அதில் மிக அதிகமாக வைட்டமின் பி6 இருக்கிறது என்று நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். இது மூளை திறம்பட செயல்பட உதவுகிறது. மாதவிடாய் பிரச்சினைகளால் ஏற்படும் மூட் ஸ்விங்ஸை சரி செய்ய உதவும்.
5. ஆப்ரிகாட்ஸ்
ஆப்ரிகாட்ஸ் என்ற பழம் பலருக்கும் அறிமுகமாகாத தெரிந்தவர்களும் கூட அதிகம் விரும்பாத ஒரு பழமாகவே இருக்கிறது. இதில் வைட்டமின் சி அதிகம். பீட்டா கரோடீனும் தான். இந்த இரண்டுமே உடலை உற்சாகமாக வைத்துக் கொள்ள உதவும். இது நாள்பட்ட மூட் டிஸ் ஆர்டர்களை சரி செய்ய உதவும்.
6. எலுமிச்சை:
எலுமிச்சை நிறைய நீர்ச்சத்து மற்றும் வைட்டமின்களை தன்னகத்தைக் கொண்டது. இது உடனடியாக புத்துணர்ச்சி தருவது. இது மனதிற்கும் உற்சாகம் தரும். எலுமிச்சை சாறில் தண்ணீரும் புதினா இலைகளும் சேர்த்து அருந்துவது நலம் தரும்.
7. தப்பூசணி
தர்ப்பூசணிப்பழத்தில் 90% நீர்ச்சத்து தான் இருக்கிறது. உடலில் நீர்ச்சத்து போகும்போது இதனை எடுத்துக் கொள்வது அவசியம். மன அழுத்தத்தைப் போக்க தர்ப்பூசணி பழமும், தர்ப்பூசணி சாறும் உதவும்.
8. ஆரஞ்சு
ஆரஞ்சு பழங்களிலும் தண்ணீர்ச் சத்து அதிகம். அதில் பொட்டாசியம் சத்தும் அதிகமாக இருக்கிறது. இது மன அழுத்தம், மனப் பதற்றம் ஆகியனவற்றில் இருந்து தேற வெகுவாக உதவும்.
சரிவிகித உணவிலிருந்து கிடைக்கும் ஆற்றல் மூளையை நேர்மறையாகச் சிந்திக்க வைக்கிறது, மூளையின் செயல்திறன் இதனால் அதிகரிக்கிறது" என்கிறார். ஊட்டச்சத்து நிபுணர் மருத்துவர் ஜினால் பட்டேல் பேசும்போது, "மனநலம் என்பது மூளை, வயிறு, செரிமான உறுப்புகளோடு தொடர்புடையது. நம் உணவோடும் தொடர்புடையது"