பழங்களின் அரசி:


நம்மை வியப்பில் ஆழ்த்தகூடிய அளவிற்கு பல நன்மைகள் பொதிந்திருப்பது வில்வம் மரம். இதற்கு ஆங்கிலத்தில் மர ஆப்பிள் (Wood Apple), பேல் பழம் ( Bael Fruit) என்றழைக்கப்படுகிறது.  இதன் அறிவியம் பெயர், Aegle marmelos. வில்வ பழத்தில் பல்வேறு நன்மைகள் நிறைந்துள்ளது. அந்தந்த பருவத்தில் கிடைக்கும் பழம், காயகறிகள், மாமிசம் உள்ளிட்டவற்றை உண்பது நல்லது. கோடைக்காலம் என்றாலே மாம்பழம், தர்பூசணி, பலாப்பழம் ஆகியவை நம் நினைவுக்கு வரும். ஆனால், கோடைக்காலத்தில்தான் அதிகமாக கிடைக்கும் ஒரு பழம் வில்வ பழம். பழங்களின் அரசி என்று இதை அழைக்கிறார்கள். 


வில்வ பழத்தில் பீட்டா கரோட்டீன் உள்ளிட்ட உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் இருக்கிறது. வில்வ ஜூஸ் கோடைக்காலத்தில் குடித்தால் மிகவும் நல்லது. சுட்டெரிக்கும் கோடை, தாகம், கோடையின் ஏற்படும் பல்வேறு உடல் உபாதைகள் போன்றவவைகளை வில்வ ஜூஸ் குடிப்பதால் தவிர்க்கலாம். 


வில்வ பழத்தில் உள்ள நன்மைகள்:


நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்:

வில்வ ஜூஸில்  வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது.  இது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். கோடை காலத்தில் இந்த ஜூஸை குடிப்பதால் பாக்டீரியா மற்றும் வைரஸ்களால் ஏற்படும் தொற்றுகளை தவிர்க்கலாம்.


வீக்கத்துக்கு எதிரான பலன்கள்:

இதில் ஆண்டி- இன்ஃபெளமெட்ரீ பண்புகள் இருக்கிறது. இதனால் உடலின் உள்ளுறுப்புகளின் ஆரோக்கியத்திற்கு இது உதவும். 


இரத்த சுத்திகரிப்பு:

இது கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை பாதுக்காக்கிறது. இது இரத்தத்தை சுத்திகரிக்கும் பணியை மிகவும் சிறப்பாக செய்யும் திறன் கொண்டது. ஏனெனில் இது உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவும் தாதுக்களைக் கொண்டுள்ளது. இது உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் பண்பை கொண்டிருக்கிறது. கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை ஆரோக்கியத்துடன் பாதுக்காக்கிறது. 


உடலில் கொழுப்பு சேராமல் தடுக்க:

இரத்தத்தில் உள்ள கொழுப்பைக் கட்டுக்குள் வைத்திருக்க வில்வ பழ ஜூஸ் உதவுகிறது. 


செரிமான திறனை அதிகரிக்கிறது:

வில்வ பழத்தில் இரைப்பை புண்களைக் கட்டுப்படுத்தும் சத்துக்கள் இருக்கிறது. எனவே, உங்கள் செரிமான பிரச்சனைகளை தவிர்க்க இந்த மந்திர ஜூஸை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.


சரும பிரச்சனைகள் இருந்து பாதுகாப்பு:

கோடையில், தோல் பிரச்சினைகள் மற்றும் தடிப்புகள் தொடர்ந்து ஏற்படும்.  விலவ் ஜூஸ் இதைத் தடுக்கும். வில்வ இலை எண்ணெயும் சருமத்தை பாதிக்கும் பொதுவான வகை பூஞ்சைகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. இது தோல் வெடிப்பு மற்றும் அரிப்புகளை குணப்படுத்த உதவுகிறது.