நாவல்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு இத்தனை நன்மைகளா என்று நீங்கள் வியக்கக் கூடும். ஆனால் உண்மையில் ஏழைகளின் வரப்பிரசாதம் என்று கூறலாம். ஆடி மாதம் தொடங்கிவிட்டால் நாவல் பழம் கைக்குக் கிடைக்க ஆரம்பித்துவிடும். அடுத்த மாதம் ஆடியும் வந்துவிடும் நாவல் பழமும் வந்துவிடும்.


நாவல் பழம் மட்டுமல்ல அந்தந்த பருவங்களில் கிடைக்கும் பழங்களை சாப்பிடுவது நல்லது. இயற்கை நமக்குக் கொடுக்கும் வரத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாவல் பழத்தை சாப்பிடுவதால் இதயநோய், புற்றுநோய், சர்க்கரை நோய், ஆஸ்துமா, ஆர்திரிட்டிஸ் என பல நோய்களில் இருந்தும் தற்காத்துக் கொள்ளலாம். வயிறு உப்புசத்தை இந்தப் பழம் தவிர்க்கிறது. 


நாவல் பழத்தின் 6 மருத்துவ குணங்களைப் பார்ப்போம்:


சிவப்பு அணுக்களை அதிகரிக்கும்:
ரத்தசோகை இருக்கிறதா? அப்படியென்றால் நீங்கள் தவறாமல் நாவல் பழத்தை சாப்பிடுங்கள். நாவல்பழத்தில் இரும்புச்சத்தும், வைட்டமின் சி நிறைவாக உள்ளது. இதனால் ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் அதிகமாகிறது. இது உங்களின் உடல் உறுப்புகளுக்கு ஆக்சிஜன் செல்வதை சீராக்கி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.


ஈறுகளை பலப்படுத்தும்:
ஈறுகளின் ரத்தக் கசிவு இருந்தால் நாவல் பழம் தொடர்ந்து சாப்பிட்டு வாங்கள். அதுமட்டுமல்ல நாவல் மர இலைகளையும் மென்று துப்பலாம். அந்தச்சாறில் இருந்து ஆன்ட்டிபாக்டீரியல் தன்மை பல் ஈறு பிரச்சனையை சரி செய்யும்.


சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
நாவல் பழம் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இவை ஆண்ட்டி ஆக்சிடன்டுகளின் உறைவிடம் எனலாம். மேலும் இரும்புச் சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி ஆகியன உள்ளன. கண்ணுக்கு நல்லது. தோலில் உள்ள சுருக்கங்கள், பருக்கள், கரும்புள்ளிகளை நீக்கும். சருமத்தை மிருதுவாக்கும்.


ரத்த அழுத்தத்தை சீராக வைக்கும்
நாவல் பழம் ரத்த அழுத்தத்தை சீராக வைக்கும். இதில் குறிப்பிட்ட அளவு பொட்டாசியம் இருக்கிறது. இது ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உதவும்.




 


உடல் எடையைக் குறைக்க உதவும்:
உடல் பருமன், இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் தொடங்கி முதியவர்கள் வரை உடல் பருமன் பெரும் பிரச்சனையாக இருக்கிறது. நம்முடைய வாழ்க்கை முறையும் அதற்கு ஒரு காரணம். இந்நிலையில் நாவல் பழத்தை உட்கொண்டு வந்தால் அது உடல் எடையையும் கட்டுக்குள் வைக்கிறது.


சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்
உலகளவில் இந்தியாவில் சர்க்கரை நோயாளிகள் அதிகமாக உள்ளனர். பதின்ம வயதில் உள்ளவர்களுக்குக் கூட சர்க்கரை நோய் வருகிறது.. சர்க்கரை நோயாளிகள் தாராளமாக உட்கொள்ளக் கூடிய பழம் நாவல் பழம். நாவல் பழ விதைகளில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் காரணிகள் உள்ளன. அவை இன்சுலின் சுரப்பை அதிகரிக்கின்றன. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க இந்த சீசனில் நாவல் பழத்தை தவறாமல் உட்கொள்ளுங்கள்.