நாள்: 04.07.2022, சனிக்கிழமை 


நல்ல நேரம் :


காலை 6.15 மணி முதல் காலை 7.15 மணி வரை


மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை












 








 

மதியம் 7.30 மணி முதல் மாலை 8.30 மணி வரை




இராகு :


காலை 7.30 மணி முதல் காலை 9 மணி வரை


குளிகை :


மதியம் 1.30 மணி முதல் மதியம் 3 மணி வரை


எமகண்டம் :


காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி வரை


சூலம் – கிழக்கு


மேஷம் :


மேஷ ராசி நேயர்களே, இந்த நாள் நீங்கள் இரக்கக் குணத்துடன் செயல்படுவீர்கள். பழைய பகையை மறந்து நட்பு பாராட்டுவீர்கள். உங்களால் நண்பர்களுக்கு நன்மை உண்டாகும். சிவபெருமானை வழிபட்டு சிறப்பு அடைவீரகள். நம்பிக்கை அதிகரிக்கும் நாள்.


ரிஷபம்:


ரிஷப ராசி நேயர்களே, இந்தநாள் உங்களுக்கு மிகவும் அலைச்சல் ஏற்படும். இதனால், உடல் அளவிலும் மனதளவிலும் சோர்வு உண்டாகும். திடீர் பயணஙகள் உண்டாகலாம். வீண்செலவுகள் ஏற்படும் சூழல் உண்டாகும். யாரிடமும் வீண் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது. 


மிதுனம் :


மிதுன ராசி நேயர்களே, இந்த நாள் நீங்கள் மிகுந்த பரிவுடன் இருப்பீர்கள். குடும்பத்தில் அன்பு அதிகரிக்கும். மனதிற்கு இனிய சம்பவம் நடக்கும். பெற்றோர்கள் பிள்ளைகள் இடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். ஆஞ்சநேய வழிபாடு அவசியம் ஆகும். 


கடகம் :


கடக ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு வெற்றிகரமான நாள் ஆகும். நீண்ட நாள் எதிர்பார்த்த வெற்றி தொழிலில் கிட்டும். பெரியவர்கள் ஆலோசனைப்படி நடப்பீர்கள். குடும்பத்தில் நீடித்த வந்த குழப்பம் தீரும். பணவரவு உண்டாகும். 


சிம்மம்:


சிம்ம ராசி நேயர்களே, இந்தநாள் உங்களுக்கு பக்தி உண்டாகும். ஆலய வழிபாடு மேற்கொள்வீர்கள். காசி விஸ்வநாதரை வணங்கி மன நிம்மதி அடைவீர்கள். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடமையை செய்வது நல்லது. 


கன்னி :


கன்னி ராசி நேயர்களே, இந்த நாள் நீங்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். அடுத்தவர் விவகாரத்தில் தலையிடக்கூடாது. வீண் வாக்குவாதங்களில், பிரச்சினைகளில் ஈடுபடக்கூடாது. சிவபெருமான் துணையிருக்க எதற்கும் அஞ்சக்கூடாது. நம்பிக்கையுடன் கவனமாக இருக்க வேண்டும். 


துலாம் :


துலாம் ராசி நேயர்களே, இந்த நாள் நீங்கள் சாமர்த்தியமாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ள பிரச்சினைகளை சிறப்பாக செயல்பட்டு தீர்த்து வைப்பீர்கள். அன்பு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சுபகாரியங்கள் ஏற்படும். 


விருச்சிகம் :


விருச்சிக ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு மன அமைதி கிட்டும். நீண்டநாள் எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். நீண்ட தூர பயணம் மேற்கொள்வீர்கள். மனதிற்கு பிடித்தவர்களுடன் நேரத்தை செலவிடுவீர்கள். சொத்துப்பிரச்சினை அகலும்.


தனுசு :


தனுசு ராசி நேயர்களே, இந்தநாள் உங்களுக்கு மகிழ்ச்சியான நாள். குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வீர்கள். பெற்றோர்கள் பிள்ளைகள் இடையே புரிதல் அதிகரிக்கும். காதல் திருமணத்தில் முடியும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.  


மகரம் :


மகர ராசி நேயர்களே, இந்தநாள் நீங்கள் துணிச்சலுடன் செயல்படுவீர்கள். பல தைரியமான முடிவுகளை எடுப்பீர்கள். தொழிலில் எடுக்கும் முடிவால் வெற்றி உண்டாகும். புது முயற்சி தன்னம்பிக்கையை அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும்.  


கும்பம்:


கும்ப ராசி நேயர்களே, இந்தநாள் உங்களுக்கு இன்பமான நாள் ஆகும். உங்கள் நீண்ட கால உழைப்பிற்கு அங்கீகாரம் கிட்டும் நாள். திறமை வெளிப்படும் நாள். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறந்த நாளாக அமையும். ஈசனின் அருளால் இன்பம் கிட்டும். 


மீனம்:


மீன ராசி நேயர்களே, இந்தநாள் உங்களுக்கு பணவரவு உண்டாகும். நீண்டநாள் எதிர்பார்த்த காரியம் கைகூடும். புதிய மாற்றம் ஏற்படும். காதலில் நீடித்து வந்த பிரச்சினைகள் தீரும். சுபகாரிய பேச்சுக்கள் மேலோங்கும். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண