உங்கள் பார்ட்னருடன் முதல்முறையாக செக்ஸ்...பல விஷயங்களைக் கற்பனை செய்து பார்த்திருப்பீர்கள், இந்த நாள் இப்படித்தான் இருக்கவேண்டும் என முன்பே திட்டமிட்டு வைத்திருப்பீர்கள், உங்கள் முதல் செக்ஸ் எந்த இடத்தில் எப்படி இருக்கவேண்டும் என முன்பே உங்கள் பார்டனரிடம் பேசி வைத்திருப்பீர்கள். ஆனால் அந்த சமயத்தில் சிலருக்கு அனைத்தும் சொதப்பி முதல் செக்ஸ் வாழ்நாளுக்கும் ஒரு காமெடி சம்பவமாக நெஞ்சில் தங்கிவிட வாய்ப்பு உண்டு. ஆனால் முதல்முறையே 10/10 பெற வேண்டுமா? உங்கள் பார்ட்னர் செக்ஸில் உங்கள் தன்னம்பிக்கையைப் பார்த்துக்கு கூடுதலாக முத்தமழை பொழிய வேண்டுமா? இந்த டிப்ஸ்கள் எல்லாம் கவனத்தில் இருக்கட்டும். 


1. நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? 


உங்கள் பார்ட்னருடன் செக்ஸ் வைத்துக்கொள்ளப் பேரார்வத்துடன் இருக்கிறீர்கள் என்றாலும் நீங்கள் அதற்குத் தயாராக இருக்கிறீர்களா என்பதை உங்களுக்கு நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். ஒருவேளை உங்களுக்கு அந்த நிமிடம் மனப்பதட்டம் ஏற்பட்டால் அந்த செக்ஸ் உங்களுக்கு விருப்பமா? உங்கள் பார்ட்னர் நம்பிக்கைக்குரியவரா? என யோசியுங்கள். முழுமனதுடன் தான் நீங்கள் செக்ஸ் வைத்துக்கொள்ளப் போகிறீர்கள் என்றால் சிறிது ரிலாக்ஸ் செய்துகொண்டு தொடங்கலாம். 


2. உங்கள் பார்ட்னருக்குச் சம்மதமா? 


உங்கள் பார்ட்னருக்கும் உங்களுக்குமிடையே சூப்பரான கெமிஸ்ட்ரி இருக்கலாம். அவர் சொல்லாமலேயே எதையும் புரிந்துகொள்பவராக நீங்கள் இருக்கலாம். ஆனால் செக்ஸில் அவருக்கும் விருப்பமா என்பதைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். அவர் ‘நோ’ என்றால் அது நிச்சயம் ‘நோ’தான்




3. எந்தமாதிரியான செக்ஸில் விருப்பம்?


செக்ஸ் என்றால் வெறும் உச்சம் அடைவது மட்டுமல்ல. செக்ஸில் பலவகை உண்டு. வாய்வழியாக உடலுறவில் ஈடுபடுவது,(Oral sex) யோனி வழியாக அல்லது ஆசனவாய் வழியாக (vaginal sex and anal sex) உடலுறவில் ஈடுபடுவது..இப்படிப் பல வகை உடலுறவில் உண்டு. செக்ஸ் வைத்துக் கொள்வதற்கு முன்பு அதுபற்றிப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் தெளிவு உங்கள் பார்ட்னருக்கு இதில் இருக்கும் தயக்கத்தைப் போக்கும். 


4. ஃபோர்ப்ளே! 


செக்ஸ் எப்படி முடியுமோ என்கிற பதட்டத்தில் செக்ஸின்போது நமது பார்ட்னருடனான கிளர்ச்சி, சில்மிஷங்கள், ஒருவரை ஒருவர் மகிழ்விப்பது, பாலுணர்வைத் தூண்டுவது போன்ற குட்டிக் குட்டியான விஷயங்களைத் தவறவிட்டுவிடுவோம். ஆனால் இந்தக் குட்டிக் குட்டி விஷயங்கள்தான் செக்ஸ் முடியும் விதத்தை விட முக்கியம். முத்தம் கொடுப்பது, தூண்டுவது,கழுத்துப் பகுதியை அல்லது காது மடல்களைக் கடிப்பது என இருவரிடையேயான நெருக்கத்தை அதிகரிப்பது போன்றவை பார்ட்னருக்கு இன்பத்தைக் கொடுக்கும் மேலும் செக்ஸையும் எளிதாக்கும்.


5. செக்ஸ் குறித்துப் பேசுங்கள்


செக்ஸ் என்பது இன்பமானதாக இருக்கவேண்டும். செக்ஸில் உங்கள் பார்ட்னர் செய்வதில் உங்களுக்குப் பிடித்தது பிடிக்காதது, நீங்கள் செய்வதில் உங்கள் பார்ட்னருக்குப் பிடித்தது பிடிக்காதது எது என்பதைப் பேசித் தெரிந்துகொள்ளுங்கள். செக்ஸ் சூப்பரானதாக அமைந்தால் அதனை உங்கள் பார்ட்னருக்குத் தெரியப்படுத்துங்கள். நீங்கள் அவரை நேசிக்கிறீர்கள் அவரை சமமாகக் கருதுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த இவை அத்தனையும் ஒருவழி.