Yoga : யோகா செய்ய நேரமில்லயா? டேபிள் மேலே யோகா - 10 ஈஸியான யோகா பயிற்சிகள்
ஒரு நாளைக்கு சுமார் 8-9 மணிநேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு வேலை செய்வதால் நிச்சயமாக ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்பது அனைவர்க்கும் தெரிந்திருக்கும். அது உங்களின் இடுப்பு மற்றும் முதுகுத்தண்டில் அதிகமான அழுத்தத்தை ஏற்படுத்துவதோடு கீழ் முதுகு, கழுத்து வலி, தோள்பட்டை போன்றவற்றிலும் வலி ஏற்படலாம்.
இது போன்ற சமயங்களில் உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டே தினசரி சில நிமிடங்கள் யோகா பயிற்சிகள் செய்வதன் மூலம் பலன் அடையலாம்.
Chair Pigeon Pose : நாற்காலியில் அமர்ந்து கொண்டே உங்களின் உங்களின் கால்களை தரையில் வைக்கவும். நாற்காலியில் அமரும் போது எப்பொழுதுமே சம எடையை பராமரிக்கவும். உங்களின் இடது தொடையை சற்று நீட்டி உட்காருங்கள். 10-15 வினாடிகளுக்கு பிறகு மற்ற கலீல் செய்யவும். இந்த Chair Pigeon Pose செய்வதால் இடுப்பு தசைகள் மற்றும் குளுட்டுகளை நீட்டுகிறது இதனால் இயக்கம் மற்றும் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கும்.
Desk Chaturanga : உங்களின் கைகளை மேசையின் அகலத்திற்கு விளிம்பில் வைக்கவும். உங்களின் கால்களை பின்னல் வைக்கவும். உங்கள் உடல் குறுக்காக இருக்கும். இப்பொழுது மூச்சை நன்றாக உள் இழுத்து உங்கள் முழங்கைகளை 90 டிகிரி கோணத்தில் வளைக்கவும். மூச்சை வெளியேற்றும் போது, மார்பை பழைய நிலைக்கு கொண்டு வரவும். இந்த பயிற்சியை 10-12 முறை செய்யவும். இந்த யோகா பயிற்சியை செய்வதன் மூலம் உங்களின் கைகளின் தசைகள் புத்துணர்ச்சி பெறும். கழுத்தையும் வலுப்பெற செய்யும்.
Chair Lower Back Stretch : நீங்கள் நாற்காலியில் உட்கார்ந்து இருக்கும் போதே உங்கள் இடுப்பின் தூரத்தில் கால்களை வைத்து தலையை தாழ்த்தி உடலுக்கு ஓய்வு கொடுக்கவும். சில நிமிடங்களுக்கு சாதாரணமாக சுவாசித்தல் போதுமானது. இது தசையையும் முதுகெலும்பையும் பலப்படுத்தி பதட்டத்தை குறைக்கும்.
Seated Crescent Moon : உங்கள் நாற்காலியில் வசதியான நிலையில் அமர்ந்து கொண்டு உங்கள் கைகளை மேலே தூக்கி இரண்டு உள்ளங்கைகளையும் ஒன்றாக இணைக்கவும். மெதுவாக ஒரு பக்கம் சாய்ந்து 3-4 தடவை மூச்சை இழுத்து விடவேண்டும். இதை மறுபக்கமும் செய்யவும். இந்த பயிற்சி முதுகுத்தண்டை நீட்டுகிறது மற்றும் வேலையை செய்ய உங்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.
Sit and Stand Chair Pose : நாற்காலியில்அமர்ந்து கொண்டே பாதங்களை தரையில் படுமாறு வைக்கவும். உங்கள் குதிகால்களை நன்றாக அழுத்தி கால்களை பயன்படுத்தி நிற்கும் நிலைக்கு உடலை உயர்த்தவும். மீண்டும் இந்த யோகா பயிற்சியை 10 முறை செய்யவும். இதை செய்யும் போது முன்னோக்கி சாயக்கூடாது. நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் மெதுவாக பலவீனமடையும் தொடை மற்றும் குளுட் தசைகளை வலுப்படுத்தும்.
Yoga Upward Dog : நின்ற நிலையில் கைகளை நேராக வைத்து, இடுப்பை மேசையை நோக்கி லேசாக சாய்த்து மூச்சை இழுத்து, கால்களை நேராக 1 நிமிடம் வைக்கவும். பிறகு மூச்சை வெளியிடவும். இது முதுகெலும்பு மற்றும் மார்பை மேம்படுத்துகிறது.
Finger and Wrist Stretch : உங்கள் கைகளை மேலே நீட்டி, மணிக்கட்டை பயன்படுத்தி 5 முதல் 10 வட்டங்கள் உள்நோக்கியும் வெளிநோக்கியும் செய்ய வேண்டும். பிறகு விரல்களை விரித்து மூட வேண்டும். 5-10 முறை செய்யவும். இது விரல்களின் தசைகளில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. பதற்றத்தை விடுவிக்கிறது.
Seated Twist : நாற்காலியில் அமர்ந்து கொண்டே உங்களின் கைகளை பின்புறத்தில் வைக்கவும். உங்களின் வயிறு மற்றும் மார்பை ஒரு பக்கமாக திருப்பவும். 5-10 வரை சுவாசத்தை புடித்து வைத்து பிறகு மறுபுறம் செய்யவும். இது அடிவயிற்றை மசாஜ் செய்கிறது.
Blinking : உங்கள் கண்களை 10 முறை வேகமாக சிமிட்டவும். பிறகு கண்களை மூடிய படி 20 வினாடிகள் சுவாசத்தை கவனிக்கவும். இதை 5-6 முறை செய்யவும். இந்த பயிற்சி கண்களை சுத்தப்படுத்தி கண்களுக்கு உயிரூட்டுகிறது.
Palming : நாற்காலியில் அமர்ந்த படியே மூச்சை ஆழமாக எடுத்து உங்களின் உள்ளங்கைகளை தேய்த்து கண்களுக்கு மேல் வைக்கவும். இது உங்களின் கண்களை ரிலாக்ஸ் செய்யும். இதை 6-7 முறை செய்யவும். உள்ளங்கைகளில் உள்ள சூடு கண்களை சுற்றி உள்ள தசைகளை தளர்த்தி ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.