இந்தியாவில் பாரம்பரியமாக எடுத்து கொள்ளும் உணவுகள், மேற்கத்திய நாடுகளில் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. நமது பாரம்பரிய உணவுகளை வைத்து நடக்கும் ஆராய்ச்சிகளில் பழைய சாதத்திற்கு அடுத்து, இப்போது மஞ்சள் கலந்த மசாலா பால் எடுத்து கொள்வது பற்றி ஆராய்ச்சி செய்து வருகின்றனர். நமது ஊரில் மசாலா பால், அவர்களுக்கு அது golden milk.
இந்த மசாலா பால் செய்முறை இதுதான்..!
தேவையான பொருள்கள்
பால் - 120 மிலி
மஞ்சள் - 1 டீஸ்பூன்
இஞ்சி- 1/2 ஸ்பூன் (இஞ்சி தட்டி வைத்து கொள்ளவும் )
இலவங்கப்பட்டை - 1/2டீஸ்பூன்
மிளகு தூள் - 1 சிட்டிகை
தேன் - சுவைக்கு ஏற்ப
செய்முறை - ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அதில் மஞ்சள், இஞ்சி, இலவங்கப்பட்டை, மிளகு தூள் சேர்த்து ஒரு 10 நிமிடம் குறைந்த வெப்பத்தில் கொதிக்க விடவும். நன்றாக மணம் வந்த பிறகு அதை இறக்கி, தேவையான அளவு தேன் கலந்து பருகலாம்.
கோல்டன் மில்க்கின் நன்மைகள்
- இது ஆண்டி ஆக்ஸிடென்டுகள் நிறைந்த உணவு - இது உடலில் இருக்கும் இறந்த செல்களை வெளியேற்ற உதவும். செல்களை சேதப்படாமல் பாதுகாக்கும். தொற்று நோய்களுக்கு எதிராக செயல்படும்.
- மஞ்சள், இஞ்சி மற்றும் இலவங்கப்பட்டை இதில் இருப்பதால் இது அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. மூட்டுகளில் வலி, வீக்கம் ஆகியவற்றை குறைகிறது.
- அல்சைமர் மற்றும் பார்கின்சன் போன்ற மூளை செயல்திறனை பாதிக்கும் நோய்கள் வராமல் தடுக்கலாம்.
- மஞ்சளில் இருக்கும் குர்குர்மின் எனும் வேதியல் பொருள், மனஅழுத்தத்தில் இருந்து பாதுகாக்கும்.
- மஞ்சள், இஞ்சி மற்றும் இலவங்கப்பட்டை இதயத்தின் செயல்திறனை மேம்படுத்தும். அதனால் இதய நோய்கள் வராமல் தடுக்கும்.
- இலவங்கப்பட்டை மற்றும் இஞ்சி ஆகிய இரண்டும் இன்சுலின் உணர்திறனை அதிகப்படுத்தும்.இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவும். நீரிழிவு நோய் வராமல் தடுக்கும்.
- இதில் இருக்கும் மசாலா பொருள்களினால் புற்றுநோய் வராமல் தடுக்கப்படும் என சில ஆராய்ச்சிகள் கூறுகிறது. சில முடிவுகள் இதிலிருந்து முரண்படுகின்றன.இதனால், இதை பற்றி ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டு வருகிறது.
- ஆண்டிவைரல், ஆண்டிபாக்டீரியால் பண்புகள் இருப்பதால், தொற்று நோய்களில் இருந்து பாதுக்காக்கும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
- மஞ்சள் மற்றும் இஞ்சி இருப்பதால், இது அஜீரண பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக அமையும் பெருங்குடல் அழற்சி நோய்வராமல் பாதுகாக்கும்.
- இதில் கால்சியம் சத்து இருப்பதால் எலும்புகளை பலப்படுத்தும். எலும்பு தேய்மான நோய்கள் வராமல் தடுக்கும்.
கொரோனா தொற்றைப் பொறுத்தவரை, நோயெதிர்ப்புக்காக பருகும், உட்கொள்ளும் அனைத்து உணவுகளும், பானங்களும் இணை சத்துக்கள் மட்டுமே. உண்மையான எதிர்ப்பு என்பது தடுப்பூசி மூலம் மட்டுமே சாத்தியம்