Hydrogen Bomb: அணுகுண்டை விட ஆபத்தானதா ஹைட்ரஜன் குண்டு? எந்தெந்த நாடுகளிடம் இருக்கிறது தெரியுமா?
Hydrogen Bomb: அணுகுண்டை விட ஆபத்தானதா ஹைட்ரஜன் குண்டு? என்பது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Hydrogen Bomb: உலகின் எந்தெந்த நாடுகளிடம் ஹைட்ரஜன் குண்டு இருக்கிறது என்பது குறித்து கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
ஹைட்ரஜன் வெடிகுண்டு:
உலகிலேயே மிகவும் கொடிய ஆயுதம் எது என்று கேட்டால்? பெரும்பாலானோர் மனதில் தோன்றும் முதல் பதில் அணுகுண்டு. ஜப்பானின் ஹிரோஷிமா-நாகசாகி மீது அமெரிக்கா அணுகுண்டு தாக்குதல் நடத்திய போது, இந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டால் ஏற்படக்கூடிய பேரழிவை உலகம் ஒருமுறை மட்டுமே பார்த்தது. அதன்பிறகு பல தசாப்தங்கள் கடந்துவிட்டன, ஆனால் அந்த இரண்டு அணுகுண்டுகள் ஏற்படுத்திய அழிவின் வடுக்கள் இன்னும் நீங்கியபாடில்லை.
Just In




இருப்பினும், உலகின் மிக சக்திவாய்ந்த ஆயுதம் அணுகுண்டு அல்ல என்பதை உங்களீல் எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள். நீங்கள் உங்கள் மூளையை போட்டு அதிகம் கசக்கி சிந்திப்பதற்கு முன்பாகவே அதற்கான பதிலை நாங்களே சொல்கிறோம். உலகின் மிக கொடிய மற்றும் சக்திவாய்ந்த ஆயுதம் ஹைட்ரஜன் குண்டு. அதன் சக்தி எந்தவொரு அணுகுண்டையும் விட 1000 மடங்கு அதிகம். ஆகஸ்ட் 6, 1945 அன்று அமெரிக்கா ஜப்பான் மீது அணுகுண்டை வீசியபோது, 140,000 மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 70 நகரங்கள் அழிக்கப்பட்டன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், அணுகுண்டை விட 1000 மடங்கு சக்தி வாய்ந்த 'ஹைட்ரஜன் வெடிகுண்டு' எந்த அளவிலான பேரழிவை ஏற்படுத்தும் என்பதை நீங்கள் கற்பனை செய்து பார்க்கலாம்.
ஹைட்ரஜன் குண்டின் சக்தி என்ன?
சூரியனின் உட்புறத்தில் நடக்கும் அதே செயல்பாட்டில்தான் ஹைட்ரஜன் வெடிகுண்டு செயல்படுகிறது. அதாவது தொடர்ச்சியான வெடிப்பிலிருந்து வெப்பத்தை உருவாக்குகிறது. டியூட்டிரியம் மற்றும் டிரிடியம் ஆகியவை ஹைட்ரஜன் குண்டு தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த குண்டு ஐசோடோப்புகளின் இணைவு கொள்கையின் அடிப்படையில் செயல்படுகிறது. அதே செயல்முறை தான் சூரியனின் மையப்பகுதியிலும் நிகழ்கிறது. ஹைட்ரஜன் குண்டு மூன்று நிலைகளில் வெடிக்கும். முதல் இரண்டு நிலைகள் 50 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பத்தை உருவாக்குகின்றன. இந்த வெப்பம் அதன் முக்கிய உலை வெடிக்க உதவுகிறது. அதன் வெடிப்புக்குப் பிறகு, சூரியனைப் போல அதிக ஒளி உற்பத்தி செய்யப்படுகிறது. அதாவது, ஒரு நபர் அதைப் பார்ப்பதன் மூலம் பார்வையற்றவராக மாறுவார்.
எத்தனை நாடுகளில் ஹைட்ரஜன் குண்டுகள் உள்ளன?
அதிகாரப்பூர்வமாக, உலகில் குறிப்பிட்ட நாடுகளிடம் மட்டுமே ஹைட்ரஜன் வெடிகுண்டு உள்ளது. இந்த நாடுகள் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், சீனா, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இஸ்ரேல். 1952 இல் அமெரிக்கா முதன்முதலில் சோதனை செய்தது. ஒரு வருடம் கழித்து, ரஷ்யாவும் இந்த வெடிகுண்டை உருவாக்கியது. இந்த வெடிகுண்டை இந்தியா 1998-ல் சோதித்தது. இந்தியாவின் ஹைட்ரஜன் குண்டின் பெயரி “சக்தி” ஆகும். ஹைட்ரஜன் வெடிகுண்டு மனித இனத்தையே முற்றிலுமாக அழிக்கக் கூடிய சக்தி வாய்ந்தது. இதன் காரணமாகவே வரலாற்றில் எந்தப் போரிலும் ஹைட்ரஜன் வெடிகுண்டு பயன்படுத்தப்படவில்லை.