Double Entry Visa: இரட்டை அனுமதி வழங்கும் டபுள் எண்ட்ரி விசாவின் பலன்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.

விசா என்றால் என்ன?

சர்வதேச பயணங்களை மேற்கொள்வதற்கு விசா என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மற்றொரு நாட்டு குடிமகன் தங்கள் நாட்டிற்கு வர, ஒரு நாட்டின் அரசாங்கம் வழங்கும் அனுமதி தான் விசா. பொதுவாக சிங்கிள் எண்ட்ரி மற்றும் டபுள் எண்ட்ரி என இரண்டு வகையான விசாக்கள் வழங்கப்படுகின்றன. சிங்கிள் எண்ட்ரி விசாவின்படி, அது செல்லுபடியாகும் காலத்திற்குள் ஒருவர் குறிப்பிட்ட நாட்டுக்குள் ஒருமுறை சென்று வரலாம். மீண்டும் செல்ல வேண்டும் என்றால் புதியதாக விசாவிற்கு விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும்.

டபுள் எண்ட்ரி விசா என்றால் என்ன?

சிங்கிள் எண்ட்ரி விசா குறிப்பிட்ட நாட்டிற்கு செல்ல ஒருமுறை மட்டுமே அனுமதி வழங்குகிறது. ஆனால், டபுள் எண்ட்ரி விசா என்பது அது காலாவதி ஆவதற்குள் பயனாளர் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் இரண்டு முறை குறிப்பிட்ட நாட்டுக்குள் சென்று வர அனுமதி அளிக்கிறது. டபுள் எண்ட்ரி விசாக்கள் பொதுவாக வணிகப் பயணங்கள், பல நாடுகளுக்கு இடையேயான சுற்றுலா மற்றும் குடும்பத்தினர் அல்லது நண்பர்களை அடிக்கடி பார்க்க விரும்புவோரால் பயன்படுத்தபப்டுகிறது. 

டபுள் எண்ட்ரி விசாவின் நன்மைகள்:

  • நெகிழ்வான பயண விருப்பங்கள்: இரண்டு நுழைவுகளை அனுமதிக்கிறது. குறிப்பிட்ட நாட்டிலிருந்து வெளியேறி மீண்டும் உடனே நுழைய அனுமதிக்கிறது
  • பல வருகைகளுக்கு செலவு குறைந்த : ஒவ்வொரு பயணத்திற்கும் தனித்தனி சிங்கிள் எண்ட்ரி விசாக்களைப் பெறுவதற்கான செலவை விட சிக்கனமானது.
  • குறுகிய பயணங்களுக்கான வசதி: கூடுதல் விசா விண்ணப்பங்கள் இல்லாமல் விரைவான திரும்பும் பயணங்களை மேற்கொள்ள வேண்டிய பயணிகளுக்கு ஏற்றது.
  • நேர சேமிப்பு: பல விசா விண்ணப்பங்களுக்கான தேவையைக் குறைத்து, நேரத்தையும் அலைச்சலையும் மிச்சப்படுத்துகிறது.
  • மன அமைதி: பயணத் திட்டங்கள் எதிர்பாராத விதமாக மாறினால் நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது, தொந்தரவு இல்லாமல் இரண்டாவது நுழைவுக்கு அனுமதிக்கிறது.

டபுள் எண்ட்ரி விசாவின் பிரச்னைகள்:

  • அதிக செலவுகள்: பொதுவாக ஒற்றை நுழைவு விசாக்களை விட விலை அதிகம், இது ஒரு முறை பயணிப்பவர்களுக்கு அவசியமில்லை.
  • வரையறுக்கப்பட்ட உள்ளீடுகள்: இரண்டு நுழைவுகளுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது. இது நீண்ட அல்லது அடிக்கடி பயணங்களுக்கு போதுமானதாக இருக்காது.
  • கடுமையான தேவைகள்: இதற்கு பல  கூடுதல் ஆவணங்கள் மற்றும் சரியான நியாயப்படுத்தல் கட்டாயம்.
  • தவறாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறு: அனுமதிக்கப்பட்ட நுழைவுகளை மீறுவதன் மூலம் விதிமுறைகளை மீறிய சட்டச் சிக்கல்கள் அல்லது எதிர்கால விசா மறுப்புகளுக்கு வழிவகுக்கப்படலாம்.
  •  கட்டுப்பாடுகள்: இரண்டு நுழைவுகளும் விசாவின் செல்லுபடியாகும் காலத்திற்குள் நிகழ வேண்டும், கவனமாக திட்டமிடல் தேவை.

இந்தியாவில் டபுள் எண்ட்ரி விசா?

இந்திய அரசாங்கமும் வெளிநாட்டு மக்களுக்கு டபுள் எண்ட்ரியை வழங்குகிறது. சுற்றுலா, வணிகள் மற்றும் மருத்துவ காரணங்களுக்காக இந்திய அரசு டபுள் எண்ட்ரி விசா வழங்குகிறது. குறிப்பாக 6 முதல் ஒரு வருடம் வரையில் மட்டுமே இந்த விசா செல்லுபடியாகும். பயனாளரின் தேவை மற்றும் விதிகளின் அடிப்படையிலேயே இந்த கால அவகாசம் நிர்ணயம் செய்யப்படுகிறது.  இந்தியா வழங்கும் டபுள் எண்ட்ரிக்கான விசாவின் கட்டணம் செல்லுபடியாகும் காலத்தை பொறுத்தது. குறைந்தபட்சம் கட்டணம் ரூ.2,200 முதல் அதிகபட்சம் ரூ.12,700 வரை நீளும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.