Fact Check: ஒருபுறம் மகாகும்பமேளாவில் குளியல், மறுபுறம் இஃப்தார் விருந்தா? பவன் கல்யாண் குறித்து வைரலாகும் பதிவு

Fact Check: உத்தரபிரதேச மகாகும்பமேளாவில் புனித நீராடிய பவன் கல்யாண், இஃப்தார் விருந்தில் பங்கேற்றதாக சமூக வலைதள பதிவு வைரலாகி வருகிறது.

Continues below advertisement

Fact Check: உத்தரபிரதேச மகாகும்பமேளாவில் புனித நீராடிய பவன் கல்யாண், இஃப்தார் விருந்தில் பங்கேற்றதாக வைரலாகும் பதிவின் உண்மைத்தன்மை குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Continues below advertisement

வைரலாகும் பதிவு:

நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாண், தொப்பி அணிந்து இப்தார் விருந்தில் கலந்து கொண்டதாகக் கூறப்படும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சந்திரபாபு நாயுடு தலைமையிலான மாநில அரசில் ஆந்திராவின் துணை முதலமைச்சராக அங்கம் வகிக்கும் பவன் கல்யாண், தெலுங்கு தேசம் கட்சி (TDP), அவரது சொந்த ஜன சேனா கட்சி (JSP) மற்றும் பாரதிய ஜனதா கட்சி (BJP) ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு கூட்டணியின் பிரதான தலைவராக உள்ளார்.

இந்நிலையில் வைரலாகும் புகைப்படத்தை பகிர்ந்த எக்ஸ் பயனாளர்கள், 2025 கும்பமேளாவில் புனித நீராடிய பிறகு, கல்யாண் இப்போது ஒரு இப்தார் கூட்டத்தில் கலந்து கொண்டதாகக் குறிப்பிடுகின்றனர். ஒரு X பயனர் அந்தப் படத்தைப் பகிர்ந்துகொண்டு , “கும்பமேளாவில் புனித நீராடிவிட்டு திரும்பிய பிறகு பவர் ஸ்டார் பவன் கல்யாண் இப்தார் விருந்தில் தீவிரமாக பங்கேற்கிறார்!” என்று குறிப்பிட்டுள்ளார்.


உண்மைச் சரிபார்ப்பு

வைரலான புகைப்படத்தை கொண்டு ரிவர்ஸ் இமேஜ் தேடலை மேற்கொண்டோம், அதில் மார்ச் 25, 2019 அன்று ஹான்ஸ் இந்தியா வெளியிட்ட 'பவன் கல்யாண் குண்டூரில் உள்ள ஜன சேனா எம்எல்ஏ வேட்பாளரின் வீட்டில் பிரியாணி சாப்பிடுகிறார்' என்ற தலைப்பில் இதே போன்ற புகைப்படங்களைக் கண்டறிந்தோம்.

வைரலாகப் பரவி வரும் படத்தைப் போலவே, அறிக்கையில் உள்ள ஒரு படத்திலும், அதே வயதான பெண் சோபாவில் அமர்ந்து புத்தகம் படிப்பது போலவும், கல்யாண் மற்றும் மற்றவர்கள் தரையில் அமர்ந்து கவனமாகக் கேட்பது போலவும் காட்டப்பட்டது. தரையில் பரவியுள்ள பல்வேறு வகையான உணவுப் பொருட்களையும் இது படம்பிடித்தது. இது தற்போது வைரலாகப் பரவியுள்ள படத்திலும் காணப்படுகிறது.

அந்த அறிக்கையின்படி, அந்த நேரத்தில், கல்யாண் 2019 பொதுத் தேர்தலுக்காக மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தார். குண்டூர் மாவட்டத்திற்கு வருகை தந்தபோது, ​​அவர் ஜன சேனா எம்எல்ஏ வேட்பாளர் ஷேக் ஜியா உர் ரஹ்மானின் இல்லத்திற்குச் சென்றார். அங்கு ஒரு சிறப்பு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டது. கல்யாண், ரஹ்மானின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிற தலைவர்களுடன் தரையில் அமர்ந்து பிரியாணியை உண்டார்.


கல்யாண், ரஹ்மானின் வீட்டிற்கு வருகை தந்ததன் வீடியோவையும் மார்ச் 26, 2019 அன்று மேங்கோ நியூஸ் வெளியிட்டது . அது 'குண்டூரில் உள்ள ஜனசேனா எம்எல்ஏ வேட்பாளர் வீட்டில் பவன் கல்யாண் பிரியாணி சாப்பிடுகிறார் | ஆந்திர தேர்தல்கள் 2019' என்ற தலைப்பில் இருந்தது. வைரலான படத்தில் காணப்படும் அதே காட்சிகள் இந்த வீடியோவிலும் இடம்பெற்றுள்ளன. இந்த நிகழ்வை மற்ற செய்தி ஊடகங்களும் வெளியிட்டன, மேலும் மார்ச் 2019 இல் அவற்றின் சேனல்களிலும் வெளியிடப்பட்டன.

முடிவுரை:

ஆய்வின் முடிவில், உத்தரபிரதேச மகாகும்பமேளாவில் புனித நீராடிய பவன் கல்யாண், இஃப்தார் விருந்தில் பங்கேற்றதாக சமூக வலைதளத்தில் வைரலாகும் பதிவு போலியானது என்பது உறுதியாகியுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள புகைப்படம் 2019ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பதும், தற்போது தவறாக சித்தரிக்கப்படுவதும் அமபலமாகியுள்ளது.

ALSO READ: Fact Check: Pawan Kalyan attends Iftar party after holy dip in Maha Kumbh? Here’s the truth

பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக NEWSMETER என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தி தொகுப்பை மொழி பெயர்த்து எழுதியுள்ளது.

Continues below advertisement