Claim: தொடர்ச்சியாக இந்துப்பு எடுத்துக் கொண்டால் இரண்டே வாரங்களில் சிறுநீரகம் இயல்பு நிலைக்குத் திரும்பும்
Fact: இத்தகவல் தவறானது. இந்துப்பு சிறுநீரகத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வரும் என்பதற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை.
இதில், ஏதேனும் ஒரு பணியை சிறுநீரகம் சரியாக மேற்கொள்ளாத பட்சத்தில் அதையே சிறுநீரக செயலிழப்பு என்கிறோம். சிறுநீரகம் மோசமாக செயலிழந்து போனால் அதற்கு டயாலிசிஸ் செய்வதும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதுமே கடைசி சிகிச்சையாக உள்ளது. மேலும், சிறுநீரகம் செயலிழந்தவர்கள் உணவு விஷயத்தில் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும். குறிப்பாக இவர்கள் உப்பு சேர்த்து சாப்பிடுவதை கட்டுப்படுத்த வேண்டும்.

இந்நிலையில், செயலிழந்த சிறுநீரகத்தை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் அற்புதமான மருந்து ‘இந்துப்பு’ என்றும் இதனை மட்டும் பயன்படுத்தி வீட்டில் உணவு சமைத்து சாப்பிடுங்கள், 15 அல்லது அதிகபட்சம் 30 நாட்களில் சிறுநீரகம் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று சமூக வலைதளங்களில் (Archive) நீண்ட தகவல் வைரலாகி வருகிறது.