தன் மகளை வேறு வீட்டிற்கு அனுப்ப விரும்பாமல் திருமணம் செய்து கொண்டு அவரை கர்ப்பம் ஆக்கியுள்ளதாக இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த தந்தை என்று சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது.
Fact-check:
நாம் செய்த ஆய்வில் இக்காணொலி பொழுதுபோக்கிற்காக ஸ்கிரிப்ட் செய்யப்பட்டு எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது. வைரலாகும் காணொலியின் உண்மை தன்மை கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, MediaVault என்ற இணையதளத்தில் Raj Thakurrrrr என்ற பெயரில் வைரலாகும் அதே காணொலி பதிவிடப்பட்டிருந்தது. மேலும், அதில் இக்காணொலி பதிவேற்றப்பட்டிருந்த யூடியூப் சேனலின் லிங்க் இடம் பெற்றிருந்தது.
அதனை கிளிக் செய்து பார்த்தபோது, Raj Thakurrrrr என்ற யூடியூப் சேனலில், “தந்தை தனது சொந்த மகளை கர்ப்பமாக்கினார்” என்ற தலைப்புடன் வைரலாகும் அதே காணொலி கடந்த மார்ச் 5ஆம் தேதி வெளியிடப்பட்டிருந்தது. மேலும், அதன் டிஸ்கிரிப்ஷன் பகுதியில், “இக்காணொலி முற்றிலும் ஸ்கிரிப்ட் செய்யப்பட்டது, உண்மையல்ல” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, அந்த யூடியூப் சேனலை ஆய்வு செய்கையில் அதில் இதேபோன்று பல்வேறு ஸ்கிரிப்ட் செய்யப்பட்ட காணொலிகள் பதிவிடப்பட்டிருப்பது தெரிய வந்தது.