Fact Check: மகாகும்பமேளா கொண்டாட்டத்தின் போது விமானப்படையினர் திரிசூல வடிவத்தை வானில் தோற்றுவித்ததாக, இணையத்தில் வைரலாகும் புகைப்படம் குறித்து கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement


இணையத்தில் வைரலாகும் புகைப்படம்:


மகா கும்பமேளாவின் கடைசி நாளில், அதாவது பிப்ரவரி 26, 2025 அன்று பிரயாக்ராஜில் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சியின் போது எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு புகைப்படம் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. அதில் 45 நாட்கள் நீடித்த நிகழ்வின் முடிவை நினைவுகூறும் வகையில் இந்த விமான கண்காட்சி நடத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர். 


பயனர்கள் இந்த புகைப்படத்தை பகிர்ந்து, "பிரயாக்ராஜில் மகாசிவராத்திரிக்கு முன்னதாக இந்திய விமானப்படை விமான கண்காட்சியை உருவாக்கியது. விமான கண்காட்சியின் சிறப்பம்சம் என்னவென்றால், 3 சுகோய் விமானங்கள் நடுவானில் சிவபெருமானின் திரிசூலத்தின் தோற்றத்தை உருவாக்கியது. அதை மறக்கமுடியாததாக மாற்றியது" என குறிப்பிட்டுள்ளனர். இன்னும் சிலர் இந்த புகைப்படத்தைப் பகிர்ந்து, இந்த ஆண்டின் சிறந்த படம் என்றும் மெய்சிலிர்த்து வருகின்றனர். இந்நிலையில் அந்த புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.




இணையத்தில் வைரலாகும் புகைப்படம்


வைரலாகும் புகைப்படம் உண்மையா?


வைரலாகும் புகைப்படத்தின் உண்மைத்தன்மையைச் சரிபார்க்க, பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் பிப்ரவரி 26, 2025 அன்று நடைபெற்ற விமானக் கண்காட்சியின் செய்தி அறிக்கைகளை நாங்கள் ஆராய்ந்தோம். இருப்பினும், இந்த செய்தி அறிக்கைகளில் விமானப்படையினர் திரிசூல வடிவத்தை தோற்றுவித்ததாக வைரலாகும் புகைப்படம் பற்றிய எந்த தகவலும் இடம்பெறவில்லை.




பிரயாக்ராஜில் விமானப்படை சாகசம்


எப்போது எடுக்கப்பட்ட புகைப்படம்:


இந்தப் புகைப்படத்தின் உண்மைத்தன்மையை மேலும் அறிய, ரிவர்ஸ் சர்ச் முறையில் புகைப்படம் தொடர்பாக இணையத்தில் தேடுதல் மேற்கொண்டோம்.  அதில் இந்தப் புகைப்படம் மிக நீண்ட காலமாக இணையத்தில் இருப்பதைக் கண்டறிந்தோம். குறைந்தபட்சம் மார்ச் 2019 முதல் அந்த புகைப்படம் இணைத்தில் இருப்பது உறுதியானது. இதன் மூலம் இந்தப் புகைப்படம் பிப்ரவரி 26, 2025 அன்று பிரயாக்ராஜில் எடுக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது.






 




2008 குடியரசு தின அணிவகுப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படம்


இந்தத் தேடலின் போது, ​​குடியரசு தின அணிவகுப்பு நிகழ்வுகளின் போது இந்திய விமானப்படை  திரிசூல உருவத்தை தோற்றுவித்ததை நாங்கள் அறிந்தோம். 2008 ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த 59வது குடியரசு தின அணிவகுப்பின் போது மூன்று SU-30 MKI களால் செய்யப்பட்ட இந்த உருவாக்கத்தைக் காட்டும் PIB பதிவேற்றிய புகைப்படத்தில் இதைக் காணலாம்.




 


ஆனால், அதுவும் தற்போது வைரலாகும் புகைப்படத்தை போன்று இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.






உண்மை என்ன?


குடியரசு தின அணிவகுப்புகளில் இந்திய விமானப்படை பல ஆண்டுகளாக உருவாக்கிய திரிசூல அணிவகுப்பின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை காணப்பட்டுள்ளன. அதன்படி,  தற்போது வைரலாகி வரும் புகைப்படம் 2025 பிப்ரவரி 26 அன்று பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளா நிறைவு விமான கண்காட்சியின் போது எடுக்கப்பட்டது அல்ல என்பது  உறுதியாகியுள்ளது. 


also read: https://factly.in/an-old-unrelated-photo-is-falsely-shared-as-indian-air-forces-trishul-maneuver-in-prayagraj-on-the-eve-of-maha-shivarathri/


பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக Factly என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தி தொகுப்பை மொழி பெயர்த்து எழுதியுள்ளது.