அமராவதி ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறப்பு.


 




 


சாம்பார் சாகுபடி அறுவடை பணிக்காக அமராவதி ஆற்றில்  கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, நிலவரப்படி வினாடிக்கு, 192 கன அடி தண்ணீர் வந்தது. காலை 6 மணி நிலவரப்படி, தண்ணீர் வரத்து, 143 கன அடியாக குறைந்தது. சாம்பா சாகுபடி அறுவடை பணிக்காக, அமராவதி ஆற்றில் நீர் திறப்பு காலை 6:00 மணி நிலவரப்படி, 200 கன அடியிலிருந்து 300 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. புதிய பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.


 


 




 


90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 71.33 அடியாக இருந்தது. காவிரி ஆற்றின் மாயனூர் கதவணைக்கு 4,030 கன அடி தண்ணீர் வந்தது. காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு, 1,896 கண்ணாடியாக தண்ணீர் வரத்து குறைந்தது. குடிநீர் தேவைக்காக தண்ணீர் முழுதும் ஆற்றில் திறந்து விடப்பட்டது. கா. பரமத்தி அருகே கார்வலி ஆத்துப்பாளையம் அனைக்கு காலை 6 மணி நிலவரம் படி தண்ணீர் வரத்து வினாடிக்கு 17 கன அடியாக இருந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம் 14.89 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.


இந்நிலையில் அமராவதி தண்ணீர் திறப்பால் விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கரூர் மாவட்டத்தில் பல்வேறு விவசாய நிலங்களில் வண்ண வண்ண சேலைகள் பயிர்களை வேலிகளாகவும் மாறிவிட்டன. மனிதர்களின் மானத்தை காக்கும் ஆடைகள் தற்போது மகசூளை காக்கும் வேலிகளாகவும் மாறிவிட்டன. கரூர் மாவட்டத்தில் மயில்களின் எண்ணிக்கை தற்போது மிகவும் அதிகரிக்கிறது. இவை பெரும்பாலும் விளைநிலங்களை ஆக்கிரமித்துள்ளன. அவற்றில் இருக்கும் பயிர்கள் விதைகளை மயில் மற்றும் பறவைகள் கொத்தி தின்றன. விவசாயம் பாதிக்கிறது.


 


 




மேலும் விளைந்து நிற்கும் பயிர்களையும் மயில்கள் விட்டு வைப்பதில்லை. அங்கும் புகுந்து மேய்ந்து விடுகிறது. கூட்டம் கூட்டமாக ரியும் மயில்களால் மகசூல் வெகுவாக பாதிக்கிறது தேசிய பறவையாக மயில்கள் இருப்பதால் அவற்றை விரட்டத்தான் முடிகிறது. தவிர மயில்களை அடிக்க கூட முடியவில்லை. சமீப காலமாக விவசாயிகள் தங்கள் வயலை சுற்றி வண்ண வண்ண சேலைகளால் தற்காலிக வேலி அமைக்கிறார்கள். அவை மயில்கள் உள்ளிட்ட பறவைகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்கிறது.