ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் மிகவும் பிரபலமான தொடராக திகழ்வது வீரா தொடர். திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடராக  வீரா திகழ்கிறது. இந்த சீரியலை நேற்றைய எபிசோடில் வள்ளி வீரா இல்லாமல் வீட்டுக்கு போக மாட்டேன் என்று சபதம் எடுத்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து காணலாம்.

 அடம்பிடிக்கும் வள்ளி:


இந்த நிலையில் இன்றைய எபிசோடில் மாறன் வள்ளியிடம், "வீரா நாம சொல்றதை எல்லாம் கேட்க மாட்டா! நீ வீட்டுக்கு போ அத்தை, கஷ்டப்பட வேண்டாம்" என்று சொல்ல வள்ளி அதை ஏற்க மறுக்கிறாள். வீராவோட தான் வீட்டுக்கு போவேன் என உறுதியாக வள்ளி இருக்கிறாள்.  இங்கே கண்மணி வீட்டுக்கு வந்த பிறகு ராகவனிடம் நடந்த விஷயத்தை கூறி "ரொம்ப கோவத்துல இருக்கிறேன். ஆனா அந்த கோபத்தை உங்க மேல காட்ட வேண்டாம் என்று தான் வீட்டுக்கு வந்தேன்" என்று சொல்கிறாள். 


அதன் பிறகு கண்மணி மற்றும் ராஜேஷின் அம்மா என இருவரும் வள்ளி அங்கு இருப்பதால் அங்க நடப்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும் என பேசிக் கொள்கின்றனர். அதே நேரத்தில் கண்மணியே வீராவின் மீது தனக்கு நம்பிக்கை இருப்பதாக சொல்கிறாள். 


வர மறுக்கும் வீரா:


இங்கே வந்து வீட்டு வாசலில் கால் கிடக்க காத்துக் கொண்டிருக்க, வீரா ரூமில் இருந்து வெளியே வருகிறாள். வள்ளி அவளிடம் பேச முயற்சி செய்ய அப்போது வீரா "உங்க பையனால நான் ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன். என்னை, என் வாழ்க்கையை பணயம் வைக்க முடியாது. என்னால உங்க வீட்டுக்கு வர முடியாது" என அதிர்ச்சி கொடுத்து ரூமுக்குள் சென்று விடுகிறாள். 


இதனால் வள்ளி கோபமாகி "நான் சொல்றதையும் கேட்டுக்கோ! நீ இல்லாம நான் என் வீட்டுக்கு போக மாட்டேன்" என்று சொல்லி கேட் அருகே சென்று நிற்கிறாள். மேகம் கருக்க தொடங்கி இடியும், மின்னலும் தொடங்க மாறன் "அத்தை உன்னால முடியாது வீட்டுக்கு போய் விடு" என்று சொல்கிறான். ஆனால் வள்ளி வாசலை விட்டு நகராமல் அப்படியே நின்றபடி இருக்கிறாள். 


இதைப் பார்த்த வீராவுக்கும் வள்ளி இப்படி அடம் பிடிக்கிறாங்களே என்று வருத்தம் அடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய வீரா சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.