தமிழில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சிகள் பலவும் இன்று ரசிகர்களை ஈர்ப்பதற்காக பல்வேறு வித்தியாசமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஔிபரப்பி வருகின்றனர். நாடகங்கள், திரைப்படங்கள், நகைச்சுவைகள் என்று இருந்ததை மாற்றி ரியாலிட்டி ஷோக்கள், பாட்டு மற்றும் நடனப் போட்டிகள், கேம் ஷோக்கள் என்று ஒளிபரப்பி வருகின்றனர்.


இந்த வரிசையில் ஜீ தமிழ் தொலைக்காட்சி புதிய வித்தியாசமான நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்ப உள்ளது. டிஸ்கவரி தொலைக்காட்சியில் மேன் விஸ் வைல்ட் நிகழ்ச்சியில் பியர் கியல்ஸ் காடுகளில் தனியாக சென்று எவ்வாறு உயிர்வாழ்வது என்பது காட்டுவாரோ, அதேபோல காடுகளில் உயிர்வாழ்வதற்கு ஏற்படும் சவால்களில் உள்ள இடர்பாடுகளை இந்த நிகழ்ச்சி மூலம் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளனர்.




இதற்காக, போட்டியாளர்களை உண்மையிலே காடுகளுக்கு அழைத்துச் சென்று அதில் மீண்டு வரும் போட்டியாளர்களை வெற்றியாளர்களாக அறிவிக்க உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பிரபல நடிகர் விக்ராந்த், நடிகர் நந்தா, நடிகர் மற்றும் சண்டை கலைஞர் பெசன்ட்நகர் ரவி, நடிகர் உமாபதி, நடிகைகள் விஜயலட்சுமி, நடிகை காயத்ரி ரெட்டி, நடிகை ஷ்ருஷ்டி டாங்கே, நிகழ்ச்சித் தொகுப்பாளர் வி.ஜே. பார்வதி பங்கேற்கின்றனர்.






இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கான போட்டி முழுவதும் ஆப்பிரிக்காவில் உள்ள அடர்ந்த வனத்தில் நடத்தப்பட்டுள்ளது. சிங்கம், புலி, சிறுத்தைகள், பாம்புகள் என்று ஆபத்தான விலங்குள் வாழும் இந்த காட்டில் எவ்வாறு உயிர்வாழ்கின்றனர் என்பதை போட்டியாக வைத்து இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட உள்ளது.


இந்த நிகழ்ச்சிக்கு சர்வைவர் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகர் ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் தொகுத்து வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சி வரும் செப்டம்பர் மாதம் 12-ந் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது.


இதுதொடர்பாக, ஜீ தொலைக்காட்சி ப்ரோமா வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மேலும், அந்த டுவிட்டர் பதிவில் சர்வைவர் நிகழ்ச்சியின் மிகப்பெரிய ப்ரோமா இங்கே. ஆக்ஷன் கிங் பார்வையில ஆக்ஷன் பேக்கோட இருக்கப் போது. வேட்டையாட இல்ல வேட்டையாக போறவங்க யாருனு வெயிட் என்று அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை முதலில் தொகுத்து வழங்க நடிகர்கள் சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. சில காரணங்களால் அவர்களால் தொகுத்து வழங்க முடியாததால் நடிகர் அர்ஜூன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார்.