ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகி வரும் செம்பருந்தி சீரியல் கதாநாயகியாக நடித்து வருபவர் ஷபானா. செம்பருத்தி சீரியல் மிகப் பிரபலமானதை தொடர்ந்து ஷபானாவும் பிரபலமடைந்தார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமும் உருவானது. இந்த நிலையில் இவரும் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்துவரும் ஆரியனும் இவரும் காதலிப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது.


இதனைத்தொடர்ந்து ரசிகர்கள் ஷபானாவிடம் இது குறித்தான கேள்விகளை முன்வைத்தனர். அதனைத்தொடர்ந்து தான் ஆர்யனுடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு தங்களுக்கிடையேயான காதலை உறுதிப்படுத்தினார் ஷபானா. அதன் தொடர்ச்சியாக கடந்த செப்டம்பரில் இருவருக்கு இடையே நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிலையில் எப்போது கல்யாணம் என ரசிகர்கள் தொடர்ந்து ஷபானாவிடம் கேட்டு வந்தனர். இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதிலளிக்கும் வகையில் ஷபானா தற்போது திருமண கோலத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 






 


அதில் , “ என்னோட வாழ்வில் இது ரொம்ப ஸ்பெஷலான ஒரு நாள். என்னோட கல்யாணம். சீரியல்கள் எல்லாவற்றையும் முடித்துவிட்டு ஊருக்கு சென்று விடலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் இறைவன் வேறு ஒரு திட்டம் வைத்திருந்துள்ளார். இதனால் தற்போது நான் சென்னையிலேயே செட்டில் ஆக போகிறேன். உங்கள் எல்லாவற்றிற்கும் சொல்லி விட்டுதான் இந்தக் கட்டத்திர்கு செல்ல வேண்டும் என நினைத்தேன். இதை பார்க்கின்ற  எல்லோருமே என்னை ஆசிர்வதிக்க வேண்டும் என்று நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். மேலும் அந்த வீடியோ தான் மருதாணி வைத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் திருமண கோலத்தில் இருக்கும் வீடியோவையும் அவர் பதிவிட்டுள்ளார்