தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி ஜீ தமிழ். இந்த தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரி தனக்கு எதிரே நின்று மீசையை முறுக்கியவனின் மீசையை மழித்து விட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பதை குறித்து பார்க்கலாம் வாங்க. 


கார்த்தியிடம்  பாடும் ஸ்வேதா:


ரேவதி சாமுண்டீஸ்வரி செய்வதெல்லாம் ரொம்ப தப்பா இருக்கு, நீங்க எதுக்கு அவங்களுக்கு அடிபணிந்து போறீங்க. அம்மாவை இது கேள்வி கேட்டு அவங்கள திருத்துங்கப்பா என்று எடுத்து சொல்ல ராஜராஜன் எவ்வளவு முயற்சி பண்ணியாச்சு என தனது வருத்தத்தை பதிவு செய்கிறார்.


அதன் பிறகு ஸ்வேதா கார்த்தியிடம் ஓடி வந்து ‌ நான் ஒரு பாட்டு பாட பிராக்டிஸ் பண்ணி இருக்கேன். நான் பாடி காட்டுறேன் எப்படி இருக்குன்னு கேட்டு சொல்லுங்க?  என பாடலை பாட கார்த்திக் "மெதுவா பாடுங்க உங்க அம்மா வீட்ல தான் இருக்காங்க.. அவங்க காதுக்கு கேட்டா பிரச்சனை ஆகிடும்" என்று சொல்கிறான். 


சிவனாண்டி திட்டம்:


அடுத்து சிவனாண்டி தாத்தா ராஜசேதுபதி, விருமனை கூட்டி வந்து சாமுண்டீஸ்வரி வீட்டுக்குள் அனுப்பி வைக்க திட்டம் போடுகிறான். இந்த வீட்டுக்குள்ள போகும்போது கொஞ்சம் பம்மிதான் போகணும் ஏன்னா இந்த வீட்ல இருக்கறவங்களுக்கு ஆம்பளைய பார்த்தாலே பிடிக்காது. அதுக்கேத்த மாதிரி நடந்து கொள் என்று சொல்கிறான். 


இவர்கள் இருவரும் கூட்டு சேர்ந்து திட்டம் போடுவதை கார்த்திக் மறைந்திருந்து பார்த்து விடுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


gt